மார்ச் 8-ஆம் தேதி ஆண்டு தோறும் அனைத்துலக மகளிர் தினமாக (International Women’s Day) கொண்டாடப்படுகிறது. இத்தினம், 1900-ஆம் ஆண்டு தொடங்கி பெண்களின் உரிமைகள், சமூக, அரசியல் & பொருளாதார பங்கு மற்றும் சாதனை நாளாக கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டு காலத்திற்கு முன் பெண்கள் ஒன்று சேர்ந்து நடத்திய தியாக போராட்ட பலனே அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம். இவ்வாண்டு சர்வதேச மளிர் தினக் கொண்டாட்டாத்தின் கருப்பொருள் “செயல்படுத்துவோம்” (MAKE IT HAPPEN).
அறிவியலும் நாகரீகமும் பெரும் வளர்ச்சி பெற்ற போதிலும் பெண்கள் சமூகத்தில் சாதனையாளராக வாழ்வது சவாலாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து திறமையானவர்களாக இருந்த போதும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது குறைவே, இதனால் பெண்கள் சமூகத்தில் அவர்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் போகிறது. சமூகம், அரசியல் மற்றும் தொழிலில் ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்களாக இருந்தாலும் , முடிவு எடுக்கும் உயர் பதவிகளில் மிக குறைவான பெண்களே உள்ளனர்.
பெண்களுக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுருத்தும் வகையில் செயல்பட்டாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு அதிகமாகப் பேசப்பட்டாலும் தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
வன்முறை அல்லது பாலியல் வன்முறைகள் என்பது நமது சமுதாயத்தில் நிகழும் ஒரு பொதுவானப் பிரச்சனை, ஆனால் பெரும்பாலும் இப்பிரச்சனை வெளிவராமல் இருப்பதற்கு காரணம் குடும்ப கௌரவம், களங்கம் மற்றும் அவமானம் ஏற்படும் என்பதாகும். இந்த பிரச்சனை ஒரே நாளில் தீர்க்க முடியுமா? நிச்சயம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வன்முறை தனிப்பட்ட அல்லது குடும்ப விஷயமாக கருதாமல் பொது விஷயமாக எண்ண வேண்டும். அது மற்றுமல்லாமல், பெண்களை ஆண்களுக்குச் சமமானவர்கள் அல்ல என்பது தவறான கருத்து என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். .இப்பிரச்சனையின் தீர்வு வீட்டிலிருந்துதான் செயல்படுத்த முடியும். உங்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகளைச் சமமாக நடத்துங்கள், சம வாய்ப்புக்களையும் பொறுப்புகளையும் கொடுங்கள். பெண் குழந்தைகளின் லட்சிய கனவுக்கு உறுதுணையாக நின்று சுதந்திரம் கொடுங்கள். வருங்காலத்தில் நமது குழந்தைகள் சமத்துவமிக்க சமுதாயத்தில் வளர வாய்ப்பு எற்படும்.
தற்போதைய பொருளாதாரம் குடும்ப சூழ்நிலை பெண்களின் துணையோடு ஆண்கள் முன்னேற்றம் அடைய உறுதுணையாக உள்ளது. பாலின சமத்துவம் என்பது குடும்பத்தில் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் நாட்டிற்கும் பெண்களின் பங்கு தேவைப்படுகிறது. பாலின வேறுபாடுகளைத் தகர்த்தெறிவதே முழுமையான சமத்துவத்துவ சமூதாயமாக உருவாக்க முடியும். இதில் அனைத்து பெண்களுக்கும் பங்கு உண்டு. ஒன்று பட்டு செயல் படுவோம், “மாதர் தம்மை இழிவுச் செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றார் பாரதி. , அவர் கண்ட புதுமைப் பெண்னாக செயல்படுவோம்.
தொகுப்பு : குமாரி இன்ப ஜோதி – திட்ட ஒருங்கிணைப்பாளர் பினாங்கு மகளிர் மேம்பாட்டு கழகம்} else {