அன்னையர் தினக் கொண்டாட்டம்

Admin
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் அன்னையர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பூங்கொத்து வழங்கினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் அன்னையர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பூங்கொத்து வழங்கினார்.

உலக முழுவதும் கடந்த 8/5/2016-ஆம் நாள் அன்னையர் தினத்தை மிக விமரிமையாகக் கொண்டாடிய வேளையில் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ தனது தொகுதியில் அமைந்துள்ள தாமான் ஃப்ரீ ஸ்கூல் சந்தைக்கு வருகையளித்தார்.டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் 500 பூங்கொத்துகளை அன்னையர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கு வழங்கினார். மகளிர்கள் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் திரு ஜெக்டிப் அவர்களிடமிருந்து பூங்கொத்துகளைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி சிலர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்திற்கு பூங்கொத்துகளை வழங்குவார் என்பது வெள்ளிடைமலையே.
மேலும் தெலுக் பஹாங்கில் இடம்பெறும் கலப்பு மேம்பாட்டுத் திட்டம் குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்தார்.”இதுவரை மாநில அரசாங்கம் தெலுக் பஹாங்கில் கலப்பு மேம்பாட்டுத் திட்டம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ கடிதமும் பெறவில்லை, எனவே அனுமதியும் வழங்கவில்லை” என தெளிவுப்படுத்தினார் திரு ஜெக்டிப். “தெ ஸ்டார்” நாளிதழில் வெளியிடப்பட்ட தெலுக் பஹாங் மேம்பாட்டுத் திட்டம் செய்திக்கு இவ்வாறு பதிலளித்தார்.