அரசு சாரா அமைப்புகள் கோவிட்-19ஐ எதிர்க்கொள்ள ரிம 1.8 மில்லியன் மதிக்கத்தக்க மருத்துவ உபகரணங்கள் சன்மானம்

Admin

 

ஜார்ச்டவுன் – அரசு சாரா இயக்கமான ஒன் ஹொப் தொண்டு & சமூக நலன் இயக்கம் இன்று பினாங்கு மாநில அரசிற்கு ரிம1.8 மில்லியன் மதிப்புடைய பாதுகாப்பு முகக் கவசங்களை கோவிட்-19 தோற்று நோயிலிருந்து தற்காத்து கொள்ள வழங்கியுள்ளது.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் ஆகியவை அவ்வமைப்பின் தலைவர் சுவா சுய் ஹௌ முன் வரிசை படைகளின் பிரதிநிதிகளுக்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் முன்னிலையில் எடுத்து வழங்கினார். அதில் ஒன் ஹொப் தொண்டு & சமூக நலன் அமைப்பின் ஆலோசகரான டத்தோ ஸ்ரீ ஆர்.ஏ அருணாசலம் உடன் கலந்து கொண்டார்.

பினாங்கு சுகாதாரத் துறையின் பிரதிநிதியாக பினாங்கு பொது மருத்துவமனையில் இருந்தும், மலேசிய காவல்துறையின் பினாங்கு படையினர், பினாங்கு மாநகர் கழகம், மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் ஆகியோர் இதனைப் பெற்றுக் கொண்டனர்.

“இந்த நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி, ”என்று கொம்தார், மாநில முதல்வரின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒப்படைப்பு நிகழ்வில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் இவ்வாறு கூறினார்.

பினாங்கு மாநில சுகாதாரத் துறை ரிம1 மில்லியன் மதிக்கத்தக்க மருத்துவ உபகரணங்களும்; அதே வேளையில் பினாங்கு மாநகர் கழகம், பினாங்கு காவல்துறை, செபராங் பிறை மாநகர் கழகம் ஆகியோர் 100,000 முகக் கவசங்களும் பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே, பி.கே.தி லொகிஸ்த்ஜிக் தனியார் நிறுவனம்(ரிம100,000)
மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ரிம1 மில்லியன் கோவிட்-19 நிதியத்திற்கு வழங்கியுள்ளனர் என்பது பாராட்டக்குரியதாகும்.