வட மலேசிய மலையாளி சங்கத்தின் ஏற்பாட்டில் 64-வது ஆண்டாக ஓணம் பண்டிகை மிக விமரிசையாக பட்டவெர்த் மாரியம்மன் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் தமது துணைவியார் திருமதி. கலையரசியுடன் கலந்து சிறப்பித்தார். பினாங்கு மாநில மட்டுமின்றி மலேசியாவிலிருந்து பல்வேறு பகுதியிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மலையாளி சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய சிறப்புமிக்க இப்பண்டிகை கேரளத்து முறைபடி ஆடை அலங்கார போட்டி, கோலம் போடும் போட்டி மற்றும் கடந்தாண்டு அரசாங்க தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அங்கீகரிப்பு வழங்குதல், அதிர்ஷ்ட குலுக்கு என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்றது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சிறப்புரை வழங்கிய மாநில துணை முதல்வர் அவர்கள் இந்தியர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்தியர்கள் அனைத்து துறைகளிலும் பீடுநடை போட வேண்டும். அதோடு, பினாங்கு மாநிலம் அனைத்து சமய நிகழ்வுகளுக்கு வற்றாத ஆதரவு நல்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பினாங்கு இந்தியர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பு வழங்குவதோடு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம், தங்க திட்டம் என அதிகமான திட்டங்களை பினாங்கு மாநில அரசு இந்தியர்களுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மலேசிய மலையாளி சங்கம் தலைவி டத்தோ சுசீலா மேனன், வட மலேசிய மலையாளி சங்க தலைவர் திரு.ரகு தேவன், தொழிலதிபர்கள் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்வை மெருகூட்டினர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);