இந்து அறப்பணி வாரியம் இந்தியர்களின் நல்னுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் – இராமசந்திரன
பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள ஹெரிதேஜ் ஹர்மோனியன் தங்கும்விடுதியில் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்துதர்ம மாமன்ற தேசிய தலைவர் அ.இராதாகிருஷ்ணன், பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குனர் டத்தோ எம்.இராமசந்திரன், பினாங்கு வர்த்தகர் சங்கத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், புக்கிட் மெர்தாஜாம் அருள் நிலையத் தலைவர் இராஜசெட்சுமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கல்விமான்கள் இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்பை வழங்க வேண்டும் என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து அறப்பணி வாரியத் தலைமை இயக்குநர் டத்தோ இராமசந்திரன் கேட்டுக்கொண்டார். மேலும், இந்து அறப்பணி வாரியம் இந்தியர்களுக்கு பயனளிக்கும் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே, அரசு சாரா இயக்கங்கள் சமூகம் மற்றும் சமயம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ள நிதிச் சுமையை எதிர்நோக்கினால் இந்து அறப்பணி வாரியத்தை தொடர்புக் கொள்ளலாம் என உறுதியளித்தார்.
மேலும், நிகழ்வில் சிறப்புரை வழங்கிய பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் திரு.நந்தகுமார், பிறை முனிஸ்வரர் ஆலயம் நிர்வாகம், செபராங் ஜெயா கருமாரியம்மன் ஆலய நிர்வாகம் மற்றும் பலவழிகளில் நல்லாதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியை நவிழ்ந்தார். பினாங்கு இந்துதர்ம மாமன்றம் தொடர்ந்து இந்தியர்களின் சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, அத்தினத்தன்று ஊடகத்துறையில் பணிப்புரியும் நிருபர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து சான்றிதழ் எடுத்து வழங்கினார் பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் திரு.நந்தகுமார். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்நிகழ்வு பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் சமுதாய சிந்தனையைப் பிரதிபலிக்கின்றது