இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு – இராயர்

Admin
பினாங்கு ஊழல் தடுப்பு ஆனையம்
பினாங்கு ஊழல் தடுப்பு ஆனையம்

மாநில முதல்வர் லிம் குவான் எங் மற்றும் அவரது துணைவியார் பேட்டி சியூ கடந்த 6/5/2016 முதல் 7/5/2016 வரை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து ஜாலான் பிங்போங்கில் அமைந்துள்ள பங்களா வீட்டு கொள்முதல் பற்றிய விசாரணையில் கலந்து கொண்டனர். இவர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பினாங்கு இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த விவகாரத்தில் முதல்வர் சார்பாக வழக்கறிஞர் நேதாஜி இராயர் மற்றும் கோபிந் சிங் ஆஜராகும் வேளையில் பேட்டி சியூ சார்பாக வழக்கறிஞர் ராம் கர்ப்பால் பங்குப் பெறுகின்றனர். மூவரும் விசாரணையின் போது ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உடன் வந்தனர்.
இந்த விசாரணைத் தொடர்பானப் பதிவுகளை அனைத்தும் எவ்வித பிரச்சனையுமின்றி நடைப்பெற்றதாக சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான நேதாஜி இராயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பினாங்கு இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.