கல்வி மற்றும் ஆன்மீக துணையுடன் அறிவார்ந்த இளைஞர்களை உருவாக்கலாம்.

ஜோர்ச்டவுன் – ஸ்ரீ மகா மாரியம்மன் நற்பணி சங்கம் கொம்தாரில் அமைந்துள்ள பினாங்கு மாநில முதல்வர் அலுவலகத்திற்கு இன்று மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர். ஸ்ரீ மகா மாரியம்மன் நற்பணி சங்கத் தலைவர் திரு.சர்வேஸ்வரன், துணை தலைவர் திரு.குமரன், செயலாளர் திரு.முல்லைகுமரன், சங்க செயலவை உறுப்பினர்களான திரு.கருணாகரன் மற்றும் திரு.நாகலிங்கம் ஆகியோர்
வருகையளித்திருந்தனர்.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர்களுக்கு ஶ்ரீ மகா மாரியம்மன் நற்பணி சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நற்பணி சங்கம் இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பல அரிய திட்டங்களை அமல்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும். மெக்கலம் சாலையில் அமைந்துள்ள வசதிக்குறைந்த குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்பு நடத்த சிறு மண்டபம் தேவைப்படுவதைப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர்களிடம் முன்வைத்தனர்.

இதனிடையே, இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க சமயக் கல்வியை அவர்களுக்கு வழங்க இணக்கம் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டார் நற்பணி சங்கத் தலைவர் திரு.சர்வேஸ்வரன்.

மாநில முதல்வர் இந்நற்பணி சங்க விண்ணப்பங்களை பரீசிலிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு மாநில முதல்வருக்குப் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர் நற்பணி சங்க குழுவினர்.