சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் – சுந்தராஜு

rajoo perwira

பிறை – கிராம சமூக மேலாண்மை கழகம் (எம்.பி.கே.கே), பத்து காவான் பாராளுமன்ற அலுவலகம், பிறை சேவை மையம், மற்றும் மலேசிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் இணைந்து ஏற்பாட்டில் “Aspirasi Kanak-Kanak Perwira Perai 2024” நிகழ்ச்சி சாகா தங்கும்விடுதியில் இடம்பெற்றது.

 

இந்த திட்டம் குழந்தைகளுக்கு, குறிப்பாக 11 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளுக்கு, உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் தொடர்பான சில முக்கியமான தலைப்புகளில் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ஏற்பாட்டு குழுத் தலைவர் ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.

 

இக்கருத்தரங்கில் நல்ல தொடுதல் & தீயத் தொடுதல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி இன்னும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த அமர்வின் முக்கிய குறிக்கோள், பெண்களுக்கு பொருத்தமான தொடுதல் வகைகளை எவ்வாறு அங்கீகரிப்பது மற்றும் அடிப்படை அறிவை வழங்குவதாகும். மேலும், பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை இங்கு கற்றுப் பயன்பெற்றனர்.

 

இந்நிகழ்ச்சியினை சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சிறுவர்களுக்கு இம்மாதிரியான விழிப்புணர்வு கருத்தரங்குகள் அவசியம் எனவும் அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு வலுப்படுத்தி கொள்வது என பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 

இம்மாதிரியான நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பினாங்கு முழுவதும் அவ்வப்போது ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் லிம் வலியுறுத்தினார்.

rajoo perwira 3

 

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு இன்றைய நவீன காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகவே இருப்பதை எண்ணி வருந்தினார்.

 

“நிச்சயமற்ற நவீன உலகில் சிறுவர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். இந்த திட்டம் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக பிறையில் உள்ள சிறுவர்களுக்கு வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவை அவர்கள் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த அமர்வு வடிவமைக்கப்பட்டது”, என பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு தமதுரையில் குறிப்பிட்டார்.

 

இந்த திட்டம் வாயிலாக ஆரோக்கிம், அறிவாற்றல் மற்றும் நெகிழ்ச்சியான தலைமுறையின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் இத்திட்டம் எதிர்காலத்தில் தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

“இம்மாதிரியான நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த பிறை எம்.பி.கே.கே குழுவினருக்கு நன்றி; இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் ஏற்பாட்டு செய்ய வேண்டும்”, என சுந்தராஜு வலியுறுத்தினார்.