சுதந்திரம் மற்றும் சமத்துவ வாய்ப்புகள் மக்களின் வளமான வாழ்க்கைக்கு வித்திடும்- மாநில முதல்வர்

கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதி பினாங்கு மாநில மூன்றாம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வமாக இனிதே தொடங்கியது. மாநில சட்டமன்றத்தின் செயலாளரான மகேஸ்வரி மலையாண்டி, கூட்டத்தை முறையாக வழி நடத்த மாநில முதல்வர் லிம் குவான் எங் முன்மொழிந்ததைத் தொடர்ந்து சட்டமன்றம் சபாநாயகர் வழிகாட்டலுடன் தொடக்க விழாக்கண்டது. 30 மக்கள் கூட்டணி உறுப்பினர்களின் தலைவராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் 10 தேசிய முன்னணி உறுப்பினர்களின் எதிர்க்கட்சி தலைவராக ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் சித்தி சஹாரா அமீட் ஆகியோர் சட்டமன்றத்தில் சிறப்பிடம் வகித்தனர்.

சட்டமன்றத்தில் முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் ஹஸ்னோன், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி (இடமிருந்து வலம்)
சட்டமன்றத்தில் முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் ஹஸ்னோன், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி (இடமிருந்து வலம்)

11-ஆம் திகதி மே மாதம் தொடக்கி 15-ஆம் நாள் வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பல விவாதங்கள் செய்யப்பட்டு பல புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சட்டமன்றத்தில் மாநில முதல்வரிடம் தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்குத் தொகுப்புரையில் பதிலளித்தார். கீழ்காணும் அட்டவணை 1, பினாங்கு மக்கள் கூட்டணி அரசு திறந்த குத்தகை முறையில் நில விற்பனையில் ஈடுபட்டு மாநில அரசிற்கு இலாபம் ஈட்டியுள்ளது. அதேவேளையில் மக்கள் கூட்டணி அரசைவிட 35 மடங்கு கூடுதலாக நிலம் விற்பனைச் செய்தும் குறைவான வருமானத்தைப் பெற்றுள்ள தேசிய முன்னணியின் புள்ளி விபரத்தை எடுத்துரைத்தார் மாநில முதல்வர். இந்தக் கூடுதல் வருமானத்தைக் கொண்டு மக்கள் கூட்டணி அரசு பொது மலிவு வீடமைப்புத் திட்ட நிதியம் மூலம் 20,000 மலிவு விலை வீடமைப்புத் திட்டம் 5 மாவட்டங்களில் இடம்பெறுகிறது எனச் சுட்டிக்காட்டினார்.
அட்டவணை 1:தேசிய முன்னனி மற்றும் மக்கள் கூட்டணி அரசின் நில விற்பனை பட்டியல் ஒப்பீடு

அரசு

நில பரப்பளவு
மொத்த விற்ற விலை
காலக்கட்டம்
தேசிய முன்னணி
3,661 ஏக்கர்

ரிம 1.0586 பில்லியன்
1990-2008
மக்கள் கூட்டணி
106.1 ஏக்கர்
ரிம1.1102 பில்லியன்
2008-20158

பிரபிட், தெலோக் ஆயர் தாவார், சுங்கை அச்சே மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு மாநில புதிய சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாக மையம் தொடர்பாகப் பல ஆலோசனைகள் முன்மொழியப்பட்டன. மாநில சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாக மைய வடிவமைப்பு, வசதி, எளிதாக அணுகுதல், எனப் பல நிலைகளில் ஆராயப்பட்டு அணுகப்படும் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். புதிய சட்டமன்ற நிர்மாணத்திற்குப் பின் பழைய சட்டமன்றம் அருங்காட்சியகமாக உருமாற்றம் காணும் ஆசோசனையை வரவேற்றார். ஏனெனில் இச்சட்டமன்றம் ஜொர்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் அமையப்பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.

பத்து காவான் பகுதி துரித வளர்ச்சி கண்டு வரும் வேளையில் கால்நடை வளர்ப்புகளை இடம்பெயர்ப்பு செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களையும் பொருட்டு பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, செபராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு மேம்பாட்டுக் கழகம்
(பிடிசி)ஆகியோர் இணைந்து 23 கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் ப. இராமசாமி தெரிவித்தார். 23 கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களில் ஐவர் மாற்று இடம் பெறுவதற்கு ஒப்புதல் தெரிவித்ததில் இருவருக்கு வால்டோர் தோட்டத்தை மாற்று இடமாக பெற்றுக் கொண்டனர். மற்றவர்கள் பிடிசி கழகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என மாநில இரண்டாம் முதல்வர் தமது தொகுப்புரையில் தெரிவித்தார்.
நடுத்தர வர்க மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பற்றி தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் கேள்வித் தொடுத்தார். டிப்ளோமா மற்றும் இளங்கலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பினாங்கு மாநில அரசு ரிம1000-ஐ பதிவுக் கட்டணமாக வழங்குகிறது. மேலும், “பினாங்கு எதிர்கால அறக்கட்டளை நிதியம்” திறமை மற்றும் சிறந்த மனித மூலதனத்தைக் கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும் உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதை குறிப்பிட்டு பினாங்கு மாநில அரசு தொடர்ந்து அனைத்து வர்க மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் துணைபுரியும் என்றார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ

வெளிநாட்டு தொழிலாளர்கள் மாநில அரசு மலிவு விலை வீடமைப்புக் குடியிருப்புப் பகுதியில் ஆக்கரமிப்பு செய்வதைச் சுட்டிக்காட்டினார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் லிம் சூன் சி. பொதுவாகவே, குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளை வாடகைக்கு விடக் கூடாது.எனவே, வெளிநாட்டவர்கள் பணி நிமித்தம் பினாங்கு மாநிலத்தில் தங்குவதற்கு வெளிநாட்டு தொழிலாளி விடுதி கட்டவதற்கு மாநில திட்டக் குழுவிடம் பரிந்துரைக்கப்போகுவதாககிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார். இந்தச் செயல்முறை சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அமல்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);