சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு இலவசக் கணினிகளும் அச்சுப் பொறிகளும் வழங்கப்பட்டன

நீரின்றி அமையாது உலகு என்ற காலம் போய் இன்று கணினியின்றி அமையாது உலகு என்று சொல்லக்கூடிய அளவில் நவீனம் நலிந்து நிற்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. இன்றைய தொழில்நுட்ப உலகில் மனிதனையும் கணினியையும் பிரிக்க இயலாது. உலகத்தைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கணினியின் பயன்பாட்டை நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கற்றறிந்து அதில் புலமை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அண்மையில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் சுங்கை குலுகோர் வட்டாரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு இலவசக் கணினிகளும் அச்சுப் பொறிகளும் வழங்கி உதவினார்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இவ்வன்பளிப்பு வழங்கும் விழாவில் சுப்பிரமணிய தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் டாக்டர் சமயனமூர்த்தி அவர்கள் அத்தமிழ்ப்பள்ளியின் சார்பாக திரு நேதாஜியிடமிருந்து 10 கணினிகளையும் 5 அச்சுப் பொறிகளையும் பெற்றுக் கொண்டார். அண்மையில் புதிய கட்டட நிர்மாணிப்புக்காக இப்பள்ளிக்குப் 2.3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், புதிதாகக் கட்டப்படும் இப்பள்ளியில் கணினி அறை வசதியும் அமைக்கப்படவுள்ளது. அதற்கான தொடக்க அன்பளிப்பாக இக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மதிப்பிற்குரிய நேதாஜி இராயர் தெரிவித்தார்.

சவால் மிக்க இன்றைய கல்வித் திட்டத்தில் கணினியின் பயன்பாடு மிகவும் அவசியமாகிறது. ஆகவே, இப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல் கற்பித்தலில் கணினியைப் பயன்படுத்தி பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் டாக்டர் சமயனமூர்த்தி ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயரிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்கிறார். அருகில் ஆலய உறுப்பினர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்