பினாங்கு ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய உலக பாரம்பரிய தள பத்தாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் கலை,இயல்,இசை,நாடகம் போன்ற சிறப்பம்சங்களுடன் இனிதே கொண்டாடப்பட்டது. ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய உலக பாரம்பரிய தள அங்கீகாரத்தை 2008-ஆம் ஆண்டு பெற்றது. இதன் பத்தாண்டு நிறைவு கொண்டாட்டம் பினாங்கு மாநில அரசால் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
“பினாங்கு ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய உலக பாரம்பரிய தளத்தை அனைத்துலக ரீதியில் பிற இடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் பிரசித்திப்பெற வேண்டும்”, என்று மாநில முதல்வர் இக்கொண்டாட்டத்தின் போது தமதுரையில் குறிப்பிட்டார். பினாங்கு வாழ் மூவின மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இக்கொண்டாட்டம் உள்ளூர் மற்றும் வெளியூர் வருகையாளர்களை ஈத்தது என்றால் மிகையாகாது.