13-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே சங்காட் தோட்டத்தில் கால்வாய் தூய்மைக்கேடு பிரச்சனை எழும்பியுள்ளது. ஜாவியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற மதிப்பிற்குரிய சூன் லிப் சீ அவர்கள் கடந்த மே மாதத்தில் அந்த தோட்டத்தின் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் வகையில் துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சங்காட் தோட்டப்பகுதியில் முறையான கால்வாய் அமைக்கப்படாததால் 10 வருடக்காலமாக சுகாதார பிரச்சனையை எதிர்நோக்கிவருகின்றனர். இப்பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வுக்காணப்படும் என்றார்.
மேலும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜாவி சட்டமன்ற சார்பில் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இந்த திறந்த இல்ல உபசரிப்பில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகக் கலந்து கொண்டனர். இந்த திறந்த இல்ல உபசரிப்பின் போது, பொது மக்களுக்கு 75 பரிசுக்கூடை வழங்கப்பட்டன. இந்தப் பரிசுக்கூடையில் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சீனி, சமையல் எண்ணெய் மற்றும் பல பொருட்கள் இணைத்து வழங்கப்பட்டன. 75 பரிசுக்கூடையில் 14 ஆதரவற்ற குழந்தைகளுக்கும், 6 கலிடோனிய தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கும், 2 சங்காட் தோட்ட மக்களுக்கும், 53 ஏழை மக்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஜாவி சட்டமன்ற சேவை மையம் புலாவ் பூருங் குப்பைநிரப்புப் பகுதியில் பொதுதொழிலாளர்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்ய அழைக்கப்படுகின்றனர். இந்த பொதுதொழிலாளர்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஜாவி சட்டமன்ற சேவை அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளவும். இதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறைக்கப்படுகிறது.
