டெல்தா நிறுவனம் நடத்தும் இரவு ஓட்டம் வரும் 30-8-2013-ஆம் நாள் இரவு மணி 7.00-க்கு யூத் பார்க் எனும் தலத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு மாநில அரசு மற்றும் பினாங்கு நகராண்மைக் கழகம் முழு ஆதரவு நல்குகின்றனர். ‘லைன்ஸ் கிலாப்’ நிறுவனம் இப்போட்டியின் இணை ஆதரவாளர் ஆவர். இப்போட்டி போதனிகல் கார்டன் என்ற ஏழில்மிகு இயற்கை தலத்தில் இரவு வேளையில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் சுற்றுச்சூழமைப்பைப் பற்றி அறிந்து கொள்வதோடு சுகாதாரமான வாழ்க்கை முறையும் வலியுறுத்தப்படுகிறது. இப்போட்டி இரண்டாம் ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு போட்டித்தன்மைக் கொண்டது. இரண்டாம் பிரிவானது குறுகிய தூரம் ஓடக்கூடியச் சுற்றுப்புற நேசிப்பாளர்கள் கலந்து கொள்ளும் அங்கமாகும்.. பங்கேற்பாளர்கள் ரிம 40-ஐ பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்போட்டியில் 2000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் விளையாட்டு ஆடை மற்றும் பரிசுப் பை வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வழங்கப்படும். எனவே, பினாங்கு வாழ் பங்கேற்பாளர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்துவர்.
இப்போட்டியில் திரட்டப்படும் நிதியானது சுற்றுப்புற திட்டங்கள் மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் என டெல்தா நிறுவன விற்பனைத் தொடர்புக் குழு உயர் அதிகாரி அர்தூர் தோ தெரிவித்தார். இப்போட்டியை வழிநடத்த உதவும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி மாலைச் சூட்டினார் மாநில இளைஞர் & விளையாட்டு, மகளிர், குடும்ப, மற்றும் சமூக மேம்பாட்டு துறையின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங்.
‘ஏகோ ஓட்டம்’ என்பது மானிடர்களிடையே சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். டெல்தா நிறுவனமானது வியாபாரத் துறையில் மட்டும் சிறந்து விளங்காமல் தங்களால் இயன்றவரை சமூகம், சுற்றுச் சூழல், மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கும் பங்களிப்பு வழங்குகின்றனர்.
இப்போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு [email protected] என்ற அகப்பக்க முகவரியை வலம் வரலாம் அல்லது +604-262 2600, +012-4012700 என்ற தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.