கடந்த 2000 ஆண்டு தொடங்கி 2014-ஆம் ஆண்டு வரை சுமார் 255 தடுப்புக் காவல் மரண குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த எண்ணிக்கைகளில் இரண்டு வழக்குகள் மட்டும் போலீஸ் துறையினரின் நடவடிக்கையின் பெயரில் இத்தகையச் சம்பவம் நிகழ்ந்ததாக பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
பிற வழக்குகள் குறித்த விபரங்கள் இதுவரை கேள்விக்குறியாகவே இருப்பதோடு, வழக்குகளின் எண்ணிக்கைத் தொடந்து அதிகரித்த வண்ணமாக இருப்பது புள்ளி விவகார குறியீட்டின் வழி தெரிய வந்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து ‘சித்திரவதை மற்றும் கொடுமைக்கு எதிரான ஒழிப்பு’ பிரசாரத்தின் திறப்பு விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி கருத்து கூறுகையில் தடுப்பு காவலின் போது ஏற்படும் மரணச் சம்பவங்கள் கட்டாயம் ஆராயப்பட வேண்டும் எனக் கூறினார்.
மேலும் பினாங்கு மாநிலத்தில் மட்டுமே 2014–ஆம் ஆண்டு 9 சம்பவங்களும் 2015- ல் நான்கு வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து செயல்படும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரின் தொடர் கண்காணிப்பின் மூலம் தடுப்புக் காவலின் போது குற்றவாளிகளுக்கு நேரும் இந்த அவல நிலை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மலேசிய மனித உரிமை ஆணைக்குழு (சுஹாகாம்) கீழ் வரையப்பட்டிருக்கும் உரிமைகோட்பாடுகளைப் பற்றிய தெளிவின்மையே இத்தகைய சம்பவம் நிகழ முதன்மைக் காரணியாக அமைகிறது என பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக, மனித உரிமைகள் பிரகடனம் (UDHR) பிரிவு 3-ல் ஒவ்வொரு தனி நபரின் உயிர் வாழ்வதற்கான உரிமை கட்டாயம் காக்கப்பட வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் தொடந்து நிகழ்வது வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்தார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);