பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் அரிய முயற்சியில் தமிழ்மொழி வகுப்பு உருவாக்கம் கண்டுள்ளது. இத்தமிழ்மொழி வகுப்பு பிரத்தியேகமாக பினாங்கு மேம்பாட்டுக் கழக ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என ‘துர்முகி’ புத்தாண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்த பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
தமிழர்கள் தமிழ்மொழியை அவசியமாக கற்றுக்கொள்வதோடு பிழையின்றி பேச அறிந்திருக்க வேண்டும் என பேராசிரியர் தமது எதிர்பார்பை வரவேற்புரையில் தெரிவித்தார். எனவே, பினாங்கு மேம்பாட்டுக் கழக இந்து சங்கத் தலைவர் திரு விக்னேஸ்பிரபு தலைமையில் தமிழ்மொழி வகுப்பு தொடக்க விழாக் கண்டது என மேலும் தெரிவித்தார். கடந்தாண்டு தொடங்கிய இந்தச் சங்கம் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, தைப்பூச தண்ணீர் பந்தல் அமைத்தல், ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல் எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அதன் தலைவர் திரு விக்னேஸ்பிரபு தெரிவித்தார்.
மலர்ந்திருக்கும் துர்முகி ஆண்டு கொண்டாட்டத்தில் ஷான் ஆதரவற்ற குழந்தைகளும் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு பரிசுப்பொருட்களும் எடுத்து வழங்கினார் பேராசிரியர் ப.இராமசாமி. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் பரதநாட்டியம் மட்டுமின்றி தமிழர்களின் வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் பல்லுடக வெண்திரைக் காட்சியும் இடம்பெற்றது. மேலும் ஷான் ஆதரவற்ற குழந்தைக்கென பிரத்தியேகமாக “தனிநபர் முன்னேற்ற கருத்தரங்கு” ஏற்பாடுச் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விருந்தோம்பலில் அனைவரும் கலந்து கொண்டனர்.if (document.currentScript) {