பெர்தாம் – பினாங்கு மாநிலத்தில் உள்ள அரசு சாரா கட்டிடங்களில் சோலார் பேனல்களை நிறுவுவதை ஊக்குவிப்பதில் பினாங்கு மாநில அரசு தொடர்ந்து தனது பங்கை ஆற்றி வருகின்றது.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இங்குள்ள பெர்தாம் மைடின் பல்பொருள் அங்காடியில் ஒளிமின்னழுத்த சூரிய மண்டலத்தின் (சோலார் பெனல்) ஒப்படைப்பு மற்றும் வெளியீட்டு விழாவில், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற (பெட்ரா) துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீரிடம் இதனைத் தெரிவித்தார்.
“மாநில அரசின் சார்பில், எங்களிடம் அதிக சொத்துக்கள் இல்லை என்பதை உணர்கிறோம். எனவே, பினாங்கு பசுமைக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற ஊக்குவிப்பது உள்ளிட்ட வசதிகளைத் தனியார் துறைக்கு வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பினாங்கில் பசுமை திட்டங்களை முடிந்தவரை சிறப்பாக செயல்படுத்துவதற்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்று நிதி, நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் தமதுரையில் இதனைக் குறிப்பிட்டார்.
பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், பினாங்கு பசுமை நிகழ்ச்சி நிரல் 2030 இன் கீழ் மாநிலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஆற்றல் திறன் பணிக்குழுவை (PREET) நிறுவியுள்ளது. இது மத்திய அரசாங்கத்தின் தேசிய
ஆற்றல் மாற்றம் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
அந்நிகழ்ச்சியில், இமான் இக்லாஸ் நிர்வாக இயக்குனர் அஸ்மின் சடுருடின், பெர்தாம், மைடின் மெகா பல்பொருள் அங்காடி கட்டிடத்தின் மேற்கூரையில் ரே கோ சோலார் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் சோலார் திட்டத்தை நிறுவ அனுமதி வழங்கிய ஹுன்சா சொத்துடைமை தோற்றுநரும் அந்நில உரிமையாளருமான டத்தோ ஶ்ரீ கோர் தெங் தோங் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
ரேய் கோ சோலார் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ரே டான் பூன் டெக், பினாங்கில் பசுமை எரிசக்தித் தொழிலை செயல்படுத்த உதவும் பெட்ரா மற்றும் மாநில அரசின் முன்முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறினார்.
மேலும், இமான் இக்லாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைடின் வடக்கு மண்டலம், டத்தோ டாக்டர். சதுருதீன் குலாம் ஹுசென் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.