பத்து காவான் & பாடாங் கோத்தா தொகுதிகளின் சிறந்த மாணவர் விருது 2023 விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது

Admin
c3fbfe49 e064 44fb 8b4f fc7544ada0dd

ஜார்ச்டவுன் – பத்து காவான் நாடாளுமன்றம் மற்றும் பாடாங் கோத்தா மாநில சட்டமன்றத் தொகுதிக்கான (KADUN) சிறந்த மாணவர் விருதுக்கான (APC) விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.

 

இந்த விண்ணப்பத்திற்கான விண்ணப்பதாரரின் பெற்றோர்கள் அப்பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று பத்து காவான் மற்றும் பாடாங் கோத்தா நாடாளுமன்ற சேவை மைய இயக்குநர் ஈவ் சீ வே கூறினார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய சீ வே, இந்த சிறந்த மாணவர் விருது நான்கு பிரிவுகளாக வழங்கப்படும். ஆகவே, விண்ணப்பதாரர்கள் அந்த வகை வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

“விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் மிக சமீபத்திய தேர்வு முடிவு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் இரண்டு சேவை மையங்களிலும் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்,இச்செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சரின் அரசியல் செயலாளர் லாவ் கெங் ஈ மற்றும் பினாங்கு ஃபார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் லிம் சூ ஹூய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் கருத்து தெரிவித்த சீ வே, விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட இறுதித் தேதியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

 

“விண்ணப்பங்கள் இன்று திறக்கப்பட்டு, 30 ஆகஸ்ட் 2024 அன்று மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

 

“எனவே, விண்ணப்பதாரர் இரு தரப்பினரின் விவகாரங்களையும் எளிதாக்க கொடுக்கப்பட்ட காலவறை மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

1b7a967b a5e9 4c8a 9202 211d976a1b14
QR குறியீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

சிறந்த மாணவர் விருது 2023 பெறுநர்கள் ரொக்கம், சான்றிதழ் மற்றும் சிறப்புப் பதக்கம் போன்ற சிறப்புச் சலுகைகளைப் (வகையின்படி) பெறுவர்.