கடந்த 8 ஆகஸ்ட் 2015, மலேசிய இந்துதர்ம மாமன்ற மகளிர் பிரிவினரின் 2 நாள் “ இந்து தர்ம மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கில், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு “பாலின சமத்துவ விழிப்புணர்வுப் பட்டறை” நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்பட்டறையில் சுமார் 38 மகளிர் கலந்து கொண்டனர். பினாங்கு வாழ் இந்திய மகளிரிடைய பாலின சமத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையவும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் தன் முயற்சியில் ஒரு புதிய தொகுப்பை (Module) தயாரித்துள்ளது, இத்தொகுப்பு பல்லூடக வெண்திரை காட்சியின் வழி மக்களுக்குத் திரையிடப்பட்டது.
ஆண் பெண் சமத்துவம், சமுதாய கண்ணோட்டம் மற்றும் பாலின அடிப்படையிலான மகளிர் எதிர்க்கொள்ளும் அநீதிகள் பற்றிய விளக்கங்களும் பயிற்சிகளும் நடத்தப்பட்டது. நம் சமுதாயத்தில் மகளிர் இன்னும் பிந்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர், அடுத்தவரின் உதவியை எதிர்ப்பார்த்து வாழ்கின்றனர். சிலர் தனது கனவு, ஆசைகளைப் பாதியிலே விட்டு விடுகின்றனர். .மகளிர் சமுதாயத்தில் தன்னம்பிக்கையோடும் சுயமரியாதையோடும் வாழ இப்பட்டறை ஒரு தூண்டுக்கோளாக அமைகிறது.
இப்பட்டறையில் பினாங்கு மாநில அரசாங்க நிதி உதவி மற்றும் மகளிருக்குத் தேவையான உதவிப் பற்றியும் விளக்கத் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. மாநில அரசின் கீழ் இயங்கும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் பல திட்டங்கள் வரையறுத்து மகளிர் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் பீடுநடைப் போட வழி வகுக்கிறது. அவ்வகையில், மாநில அரசின் துணையோடு குழந்தைப் பராமரிப்பு மையம் துவங்கப்பட்டு பெண்கள் பிள்ளைகள் ஈன்ற பின்பும் தொடர்ந்து வேலைச் செய்வது ஊக்குவிக்கப்படுகிறது.
} else {