சுங்கை பாக்காப் – 2008 ஆம் ஆண்டு முதல் பினாங்கில் ஆட்சி செய்யும் மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் நலன் மற்றும் சிறப்பு அம்சங்களை எப்போதும் கவனித்து வருகிறது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
சிம்பாங் அம்பாட், சிம்பாங் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் இந்து சமூக மக்களிடம் பேசிய சாவ், பினாங்கு மாநில அரசு எப்போதும் மக்களின் நலனுக்காக சேவையாற்றி வருகிறது, என்றார்.
“கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக உதவிக்கரம் நீட்டி வருகிறோம்.
“அது தவிர, பினாங்கில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், மற்ற மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் போல இடிக்கப்படாமல், பராமரிப்பதை உறுதிசெய்கிறோம்.
“பினாங்கில், கலந்துரையாடல்
மற்றும் சுய புரிதல் மூலம் ஒரு இணக்கமான தீர்வை அடைய முடியும் என்று நம்புகிறோம்.
இன, மத பேதமின்றி மக்கள் சமூகத்தில் ஒற்றுமையாக வாழ முடியும் என நம்புகின்றோம்.
“மாநில அரசு முதலீடு பொறுத்தவரை குறிப்பாக செபராங் பிறை மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதன் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கப்படுகிறது.
” மேலும், பினாங்கில் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பேராக்கில் உள்ள கிரியான் ஒருங்கிணைந்த பசுமை தொழில் பூங்காவின் (KIGIP) தேவைகளைப் பூர்த்திச் செய்ய மத்திய அரசு ரிம4 பில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
“இவை அனைத்தும் மக்கள் நலனில் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
அவரது 38 ஆண்டுகால அரசியல் பயணத்தில், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், பி.கே.ஆர் கட்சியின் வேட்பாளரான டாக்டர் ஜோஹாரி அரிஃபின் அல்லது ‘cikgu அரிஃபின்’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஜோஹாரி அரிஃபினை சுங்கை பாக்காப் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அவருக்கு வாக்களிப்பது எனது நிர்வாகத்திற்கு அளிக்கும் வாக்கு என்றும், மத்திய அரசு மட்டத்தில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கான வாக்கு என்றும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இதுவரை, நாங்கள் நேர்மறையான ஆதரவைப் பெற்றுள்ளோம், மேலும் இந்த உத்வேகத்தைத் தொடரும்,” என்று அவர் கூறினார்.
இந்து சமூகத்துடனான அமர்வின் போது புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐய்க், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோ-லியுங் மற்றும் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.