உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு இவையனைத்தையும் உள்ளடக்கிய பொங்கல் விழா இப்போது மலேசியர்களின் விருப்பதிற்குரிய திருவிழாவாக அனைத்து நிலையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவ்வகையில் பினாங்கு மாநில அளவிலான பொங்கல் கொண்டாட்டம் கடந்த 24-ஆம் திகதி பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு முத்தமிழ்ச் சங்கம், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு இராமர் ஆலயம், ஸ்ரீ ஆனந்த பவன் உணவகம் ஆகிய 9 அரசு சார இயக்கங்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு இயக்கங்களும் குழு முறையில் பொங்கல் வைத்தனர்.
மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண அரிசி மாவில் கோலங்கள் இடப்பட்டு அவ்விடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டு இந்து அறப்பணி வாரியக் கட்டடம் இந்தியப் பாரம்பரியத்தை வெளிபடுத்தி நின்றது. அதோடு, அந்நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களான மயிலாட்டம், ஒல்லி ஆட்டம், பரதநாட்டியம், கோலாட்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. வரவேற்புரையாற்றிய பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, இந்நிகழ்வு மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என அறிவித்தார். பினாங்கு
தண்ணீர் மலை ஆலயத்திற்குப் புதிய மின்தூக்கி மின்சுடலை இணைப்பு நிர்மாணிப்பதற்கு சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது நஸ்ரி அப்துல் அசிஸ் அவைகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகக் கூறினார். 6.2 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்படும் இத்திடத்தை 11வது மலேசிய திட்டத்தில் வரையறுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது நஸ்ரி. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பினாங்கு மாநிலத்திற்கு கூடுதல் சுற்றுப்பயணிகள் வருவர் என எடுத்துரைத்தார்.
இப்பொங்கல் கொண்டாட்டத்தில் வாழ்த்து உரையாற்றிய மாநில முதல்வர் இந்து அறப்பணி வாரியம் வெற்றி கரமாக வழிநடத்தப்படுவதாகக் கூறினார். பினாங்கு மக்கள் கூட்டணி அரசு இந்திய சமூகத்திற்கு பொதுத் தேர்தல் காலக்கட்டத்தில் மட்டுமின்றி எப்பொழுதும் “நம்பிக்கைக்கு” அஸ்திவாரமாக விளக்குவதாகப் பறைச்சாற்றினார்.
மேலும், இத்தைத்திங்கள் கொண்டாட்டம் பிறை சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் தாமான் இண்ராவாசே திடலிலும், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற ஏற்பாட்டில் கம்போங் புவா பாலா, தாமான் ப்ராவுன் மற்றும் பல இடங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. அனைத்து கொண்டாட்டங்களிலும் பினாங்கு மாநில அனைத்து இனத்தையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தத்தம் தங்களின் ஆதரவை வழங்கி பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);