புக்கிட் மெர்தாஜாம் – பினாங்கில் இயங்கும் ‘Actiforce’ அதிநவீன தொழிற்சாலை பிரமாண்ட திறப்பு விழாக் கண்டது.
நெதர்லாந்து நாட்டை தலைமையகமாகக் கொண்டு இந்த தொழிற்சாலை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பினாங்கில் அதன் அதிநவீன உற்பத்தி வசதியை மேம்படுத்த தேர்ந்தெடுத்துள்ளது.
புக்கிட் மிஞ்யாக் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள புதிய அதிநவீன நிறுவனம், ஏறக்குறைய 13,300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இது பினாங்கில் உள்ள Actiforce நிறுவனத்தின் இரண்டாவது தொழிற்சாலை ஆகும். முதல் தொழிற்சாலை 2004 முதல் அதே தொழிற்துறை பகுதியில் இயங்கி வருகிறது.
Actiforce நிறுவனம் ஜெர்மனியின் டச்சு குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான தளவாடப்பொருட்கள் பொருத்தும் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.
டச்சு குழுமத்தின் உரிமையாளரும் தலைவருமான டாக்டர் ஆண்ட்ரியாஸ் ஹெட்டிச் கூறுகையில், புதிய தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டில் ரிம148 மில்லியன் வருவாயை உருவாக்கும் என்றும், 99% ஏற்றுமதி சந்தையில் பங்களிப்பு வழங்கும் என்று Actiforce திட்டமிட்டுள்ளது.
மேலும், பினாங்கு வர்த்தகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புறநகர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ரஷிடி ஜினோல், இன்வெஸ்ட்பினாங்கு தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், பினாங்கு மிடா (மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம்) இயக்குநர் முஹம்மது கடாபி சர்டார் முகமது, Actiforce
தலைமை நிதி அதிகாரி ஹாரி ஸ்லிங்கர்லேண்ட், Actiforce தலைமை அதிகாரி ஹோல்கர் ஃப்ரிக், டச்சு குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் மைக்கேல் லெஹ்ம்குல் மற்றும் ஜனா ஷான்ஃபீல்ட் கலந்து கொண்டனர்.
Actiforce புதிய தொழிற்சாலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), தளவாடப் பொருட்கள் பொருத்தும் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மையமாக செயல்படும் என்று டாக்டர் ஆண்ட்ரியாஸ் மேலும் கூறினார்.
இது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளை பூர்த்திச் செய்வதற்குத் துணைபுரிகிறது.
உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்; உள்ளூர் சமூகத்திற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்; பிராந்திய வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளராக அதன் நிலையை உறுதிப்படுத்தவும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது,” என்றார்.
Actiforce அதன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களுடன் கூடிய அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் உற்பத்தி நடைமுறைகளைச் செயல்படுத்த உறுதிப் பூண்டுள்ளது என டாக்டர் ஆண்ட்ரியாஸின் கூறினார்.
புதிய தொழிற்சாலையின் திறப்பு பல்வேறு வகைகளில் உள்ளூர் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்றும் டாக்டர் ஆண்ட்ரியாஸ் அறிவித்தார்.
தற்போது, Actiforce 50 க்கும் மேற்பட்ட உயர்தர நிபுணர்களைக் கொண்டுள்ளது. மேலும், வணிகம் மேம்பாடுக் காணும் போது, பரந்த அளவிலான நிபுணர்கள் மற்றும் பொது வல்லுனர்களுக்கான வேலை வாய்ப்புகளுடன் மூன்று மடங்கு பணியாளர்களுக்கான தேவை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், Actiforce நிறுவனம் பினாங்கில் அதன் அதிநவீன தொழிற்சாலை திறக்கப்பட்டதற்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வாழ்த்து தெரிவித்தார்.
வீடுகள், அலுவலகங்கள், தொழில்துறை, விருந்தோம்பல், கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அத்தியாவசியமான தளவாடங்கள் மற்றும் வாழ்க்கைத் தீர்வுகளை Actiforce நிறுவனம் உற்பத்தி செய்கிறது, என்றார்.
இது மூலப்பொருட்களை வாங்குவது முதல் தயாரிப்பு தரக் கட்டுப்பாடு வரை அனைத்துலக சந்தைகளுக்கு விநியோகிப்பது வரை முழு உற்பத்தி செயல்முறைக்கும் பொறுப்பேற்கிறது. இந்நிறுவனம் நிலையான கவனத்துடன் தீர்வுகளையும் மற்றும் நிலையான உற்பத்திக்கான செயல்முறைகளையும் மேம்படுத்துகிறது.
Actiforce நிறுவனம் பினாங்கில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்படும் வேளையில், இந்தப் புதிய தொழிற்சாலை பினாங்கின் வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு சான்றாக செயல்படுகிறது. மேலும், தொழில்துறை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறது.
நெதர்லாந்தின் முதலீடுகள் பினாங்கில் கணிசமான பங்களிப்பை அளித்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவு ரிம71.2 பில்லியனாக இருப்பதாகவும் சாவ் பகிர்ந்து கொண்டார்.