தம்புன் – செயற்கை நுண்ணறிவு (AI) இனி ஒரு ஆடம்பரமானது அல்ல, ஆனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான கருவியாகும் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
இன்று டெல் ஆசியா பசிபிக் வாடிக்கையாளர் மையம் 2 (APCC2)-க்கு வருகையளித்த போது, பினாங்கில் SME-களின் பொருத்தம் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதில் AI உருமாற்றம் திறனைக் கொண்டிருக்கிறது என சாவ் வலியுறுத்தினார்.
இந்த ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டி, பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக வளரும் சூழலை உருவாக்க SME-களுடன் தங்கள் AI நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சாவ் வலியுறுத்தினார்.
“MNC-கள் தொடர்ந்து முன்னேற்றம் அடையும் அதே வேளையில், SME-களும் இந்த நவீன காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகள் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும்.
AI இன் வணிகத் திறன் அபரிதமானது, மேலும் திறம்பட பயன்படுத்தினால், எல்லாத் தொழில்களிலும் சிறந்த வளர்ச்சியை அனுபவிக்க முடியும்,” என்று Dell நடத்திய ‘Gen AI Skilling for Industry 4.0 Adoption in SMEs’ பட்டறையில் சாவ் கூறினார்.
AI தத்தெடுப்பைத் தழுவுவதற்கான தகவல் மற்றும் கருவிகளை SME-களுக்கு வழங்கியதால் இந்தப் பட்டறை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
“சுற்றுச்சூழல் கூட்டாளர்களின் ஆதரவுடன், AI தத்தெடுப்பை விரைவுப்படுத்த எங்கள் பலத்தை ஒருங்கிணைக்க முடியும். இது தொழில்துறை 4.0 சகாப்தத்தில் எங்கள் SME-களுக்கு போட்டித்தன்மையை வழங்கும்,” என சாவ் மேலும் கூறினார்.
பினாங்கில் எதிர்காலத்தில் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், பினாங்கு அனைத்துலக வியாபார சேவை (ஜி.பி.எஸ்) தொழில்நுட்ப அகாடமியின் AI அகாடமியை ஏப்ரல் மாதம் தொடங்கப்போவதாக சாவ் அறிவித்தார்.
தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட AI மற்றும் இயக்க AI கல்வியை இந்த அகாடமி வழங்கும்.
டிஜிட்டல் சகாப்தத்தில் திறன் மிக்க மனித வளத்தை பினாங்கின் மேம்படுத்துவதற்காக எங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி திகழ்கிறது,” என்றார்.
இன்றைய நிகழ்ச்சியில், டெல் டெக்னாலஜிஸ் மலேசியா ஏற்பாட்டில் பினாங்கு பசுமைக் கழகம் (PGC), ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவனம் மற்றும் பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் இணை ஆதரவில் வழிநடத்தப்படும் ‘மின்-அறுவடை’ பிரச்சாரம் 2025-ஐ சாவ் தொடக்கி வைத்தார்.
“இந்தப் பிரச்சாரம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியைக் காட்டிலும் இது கூட்டு ஒத்துழைப்புக்கானத் தேடல் ஆகும்.
“நாங்கள் 100 மெட்ரிக் டன் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், வணிகங்கள் மற்றும் சமூகத்தை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் பங்கை ஆற்ற ஊக்குவிப்போம்,” என்று சாவ் கூறினார்
தேசிய குறைகடத்தி வியூகத்திற்கு (NSS) ரிம25 பில்லியன் ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை சாவ் வலியுறுத்தினார்.
உலகப் பொருளாதார சக்தியாக மலேசியாவின் போட்டித்தன்மையை பராமரிக்க இந்த நிதி போதுமானதாக உள்ளதா என்பது குறித்து அவரது கருத்தைத் தெரிவித்தார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA), டிஜிட்டல் பினாங்கு மற்றும் வடக்கு காரிடார் பொருளாதார மண்டலம் (NCER) போன்ற முக்கிய பங்குதாரர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக சாவ் நன்றித் தெரிவித்தார்.
பினாங்கின் பொருளாதார நிலப்பரப்பை வலுப்படுத்தும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக Iron Mountain, Microsoft மற்றும் Equinix உள்ளிட்ட டெல் இன் கூட்டாளர்களையும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் டெல் டெக்னாலஜிஸ் மலேசியா விற்பனை நிர்வாக இயக்குநர் சரவணன் கிருஷ்ணன், டெல் டெக்னாலஜிஸ் சொத்து மீட்பு சேவை மூத்த இயக்குநர் கிரிசெல்டா வில்லனுவா, ஷான் பூர்ணம் இயக்குநர் ரோஸ் குவான் உள்ளிட்ட முக்கிய தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.