பினாங்கு வாழ் இந்திய மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கொம்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு அதிகமான இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் முதல் தவணையில் 142 மாணவர்கள் மட்டுமே இந்த உபகாரச் சம்பளம் பெற தகுதிப்பெற்றனர். இந்து அறப்பணி வாரிய நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம370,490-ஐ வழங்கப்பட்டது.
இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும் என்றார் பேராசிரியர். மாணவர்கள் எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தினால் மட்டுமே வேலை வாய்ப்புப் பெற முடியும் என மேலும் தெரிவித்தார். இன்றைய மாணவர்களே நாளைய இந்திய சமூகத்தின் ஆணிவேர் என்றார்.
இவ்வுதவித் தொகை டிப்ளோமா(foundation), சான்றிதழ், மற்றும் இளங்கலை பட்டம் என்ற கல்வித் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்கள் கல்வியில் தங்களின் முழு கவனத்தைச் செலுத்தி எதிர்காலத்தில் சிறந்த நிபுணர்களாக உருவாக வேண்டும் என்றார் இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகக் கொடுக்கப்படும் உபகாரச் சம்பளம் ஒருபோதும் மீட்டுக் கொள்ளப்படமாட்டாது என்றும் முற்றிலும் இலவசம் என்றும் சூளுரைத்தார்.
இந்து அறப்பணி வாரியத்தின் கீழ்ச்செயல்படும் நிலம், கடை, வீடு ஆகிய சொத்துகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை இந்திய மாணவர்களின் கல்வி சுமையைக் குறைக்க வழங்குகின்றனர் என்பது பெருமைக்குரியது. கடந்த 2008 முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்து அறப்பணி வாரியம் ரிம2,008 511.20 வழங்கியுள்ளது.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);