பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்டத்தின்  அமலாக்க ஆய்வு இறுதி கட்டத்தில் உள்ளது – முதல்வர்.

Admin

ஜார்ச்டவுன் – கடல்வழி சுரங்கப்பாதை திட்டம் தற்போது அமலாக்க ஆய்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பினாங்கு மாநில முதல்வர் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் வாய்மொழி கேள்வி பதில் நேரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

முதல்வர் கூறுகையில், இந்த ஆய்வறிக்கையை தனியார் கட்டுமான நிறுவனமான  கொன்சோதியம் செனித் கொன்ஸ்ராக்‌ஷன் சென் பெர்ஹாட் மாநில அரசின் தொழில்நுட்ப ஆலோசகரிடம் (எச்.எஸ்.எஸ்.ஐ சென் பெர்ஹாட்)சரிப் பார்க்கவும் அங்கீகரிக்கவும் வழங்கப்பட்டது என்றார்.

” மாநில அரசு இந்த ஆய்வு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் இது பற்றிய கருத்துகள் சீர்திருத்தம் செய்வதற்காக CZC – நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

“இதுவரை, மாநில அரசு  கடல்வழி அமலாக்க ஆய்விற்கு எவ்வித கட்டணமும் செலுத்தவில்லை; இந்த ஆய்வறிக்கை முழுமை பெற்று தொழில்நுட்ப ஆலோசகரின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் கட்டணம் வழங்க முடியும்”, என பெனாகா சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மாநில முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கு முன்பதாக , மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கின்றதா என முகமது யூஸ்னி
வினவினார். அதற்கு பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மேதகு சாவ் கொன் யாவ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2018  ஆண்சு தொடக்கத்தில் இத்திட்டம் தொடர்பாக விசாரணை நடத்தியது என பதிலளித்தார். ” இத்திட்டத்தில் மாநில அரசு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது; இவ்விசாரணை ஒரு சில தரப்பினர் இத்திட்டத்தின் குத்தகை குறித்து விடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது” என சூளுரைத்தார்.

“எனவே, மாநில அரசு இத்திட்டம் தொடர்பாக யாரேனும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டால் அல்லது தவறுகள் செய்திருந்தால் மாநில அரசு ஒதுபோதும் சம்மந்தப்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க தவறாது”, என திட்டவட்டமாக மாநில முதல்வர் குறிப்பிட்டார்.

இந்த கடல்வழி சுரங்கப்பாதை திட்டம் அமலாக்கம் தொடர்பாக மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். எனினும், இத்திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.