பினாங்கு மாநகர் மன்றத்தின் புத்தாக்கத் திறன் வெளிப்படுத்தும் முயற்சியில் கடந்த 28 மே தொடங்கி 31 மே 2015 வரை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற சிறு கப்பல் வடிவமைக்கும் போட்டியில் (Pertandingan Flotila “ Magic of the Night 2015”) கலந்து கொண்டு ஆக்கப்பூர்வ படைப்பு மற்றும் பிரபலமான படைப்பு எனும் இரு வெவ்வேறு அடிப்படையில் வாகை சூடியது. மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சு ஏற்பாட்டில் 14 மாநிலங்களும் சீனாவின் சூஸ்ஹவ் நாட்டிலிருந்து ஒரு கப்பலும் அப்போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பினாங்கு மாநகர் மன்றத்தின் இவ்வெற்றியைக் கொண்டாடும் வகையில் அச்சிறு கப்பல் பெர்சியாரான் கர்பால் சிங் சாலையில் ஆறு மாத காலத்திற்கு பொதுமக்களின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை அதன் துவக்க விழா சிறப்புரையில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நோன்பு பெருநாள் மற்றும் விடுமுறை காலங்களில் சுற்றுபயணிகளும் பொதுமக்களும் நிறைவுடன் கொண்டாட இக்கண்காட்சி உறுதுணையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர்.
ஆறு மாத காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறு கப்பல் கண்காட்சியின் பராமரிப்பு செலவிற்கு ரிம 200,000 செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பினாங்கு மாநகர் மன்றத்தின் பங்கேற்பினையும் வெற்றி வாகை சூடியதையும் மனமார வாழ்த்தினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்த வெற்றியை வரும் ஆண்டுகளில் தக்க வைத்து கொள்ளுமாறு மேலும் கேட்டுக் கொண்டார். பினாங்கு சுற்றுலா துறையை மேம்படுத்த இக்கண்காட்சி தக்க சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.if (document.currentScript) {