சென்னை – பினாங்கு மாநிலம் தற்போது திருமணங்கள் மற்றும் சந்திப்புக் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு (MICE) ஒரு பிரபலமான இடமாக உருமாற்றம் கண்டு வருகிறது. இந்தியா நாட்டைச் சேர்ந்த குறிப்பாக தென்னிந்தியா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

கடந்த ஆண்டு 2024 டிசம்பர்,21 அன்று சென்னை – பினாங்கு இடையிலான
இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய நேரடி விமானச் சேவை தொடங்கியதன் மூலம் மாநிலத்தின் ஈர்ப்பு மேலும் கூடுதலாக அதிகரித்துள்ளது என்று பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் (PCEB) தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் குணசேகரன் கூறினார்.
“பினாங்கில் இலக்கு திருமணங்கள் குறைந்தபட்சம் 250 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து வழங்கப்படுகிறது. எனவே, இந்த இலக்கு திருமணங்கள் பெரும்பாலும் கடற்கரையை மையமாக கொண்ட தலங்கள் மற்றும் பிரதான பினாங்கு நிலப்பகுதி தங்கும்விடுதிகளில் நடத்த தொடர்ச்சியான கோரிக்கைகள் பெறப்படுகின்றன. எனவே, இவை அனைத்தும் மிகவும் நேர்மறையாக அமைகிறது.
“இந்திய சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக தனி பயணிகள், தேனிலவு பயணிகள் மற்றும் குடும்ப உறுப்பினருடனானப் பயணம் ஆகியவை பினாங்கு மாநிலத்திற்குப் புதிய அங்கமாக அமைகிறது,” என்றார்.
பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் PCEB இயக்குனருமான வோங் யூயி ஹார்ங், PCEB பினாங்கு – சென்னை உடனான ஊடக பயண ஊடக சந்திப்புக் கூட்டத்தில் இதனைக் கூறினார்.
“வருகின்ற ஏப்ரல் மாதம் யோகா மற்றும் நல்வாழ்வு மாநாடு, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து 500 பங்கேற்பாளர்கள் ஈர்க்கும் வகையில் நடைபெறும் மாநாடு போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுடன் பினாங்கு மேம்பாடு கண்டு வரும் MICE இடமாக திகழ்கிறது என்று அஷ்வின் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி,4
மற்றும் 5-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டை விடுத்து முதல் முறையாக 11வது உல தமிழ் வம்சாவளி அமைப்பு (GOTO) அதன் மாநாட்டை பினாங்கில் நடத்தியபோது, வணிக மற்றும் ஓய்வு நிகழ்ச்சிகளுக்கான பினாங்கின் வளர்ந்து வரும் ஈர்ப்பும் நிரூபிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் சிங்கப்பூர், இந்தியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதோடு, ஹாங்காங் நாட்டின்
‘தி பேர்ல் ஆஃப் ஓரியண்ட்’ திரைப்படம் போன்று கோலிவுட் (தமிழ் திரைப்படத் துறை) திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்க்கும் வகையில், மலேசிய திரைப்பட ஊக்கத்தொகை (FIMI), தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசியா (Finas) ஆகியவற்றின் கீழ் கூடுதல் நிதி ஊக்கத்தொகைகள் வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இது இந்திய சந்தையிலிருந்து தொடங்க வேண்டும். முன்னதாக பினாங்கில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சற்று சவாலாக இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் நேரடி விமான சேவைதான் என்று நான் நினைக்கிறேன்.
“எனவே, ஒவ்வொரு முறையும் நாம் ஒரு குறிப்பிட்ட இயக்குநரையோ அல்லது தயாரிப்பாளரையோ அணுகும்போது, கோலாலம்பூரிலிருந்து, பின்னர் கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்கு செல்வது எப்போதும் சவாலாக இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், பினாங்கிற்கான இண்டிகோ நேரடி விமானச் சேவைக்குப் பிறகு, நிறைய படப்பிடிப்பு உரையாடல்கள் மீண்டும் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் பினாங்கில் ஒன்று அல்லது இரண்டு திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்றாலே போதும், அதன் இலக்கு மீண்டும் தொடங்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டார்.
டிசம்பர்,21 முதல் சென்னையிலிருந்து பினாங்கிற்குப் புதிய நேரடி வழித்தடத்தை இண்டிகோ அறிமுகப்படுத்துகிறது. இதில் வணிக ரக இருக்கைகள் மற்றும் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்புகளுடன் வசதியான விமான அனுபவத்தை வழங்குகிறது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையம் கடந்த ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 51.43 சதவீதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது இந்த துடிப்பான இடத்தின் மீதான வளர்ச்சி காணும் ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.