பினாங்கு தெற்குத் தீவுகள் (PSI) மீட்புத் திட்டத்திற்கு EIA ஒப்புதல்

Admin

ஜார்ச்டவுன் – சுற்றுச்சூழல் துறை(DOE),
பினாங்கு தெற்குத் தீவுகள் (PSI) மீட்புத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு (NRECC) மேற்பார்வையின் கீழ் மத்திய துறையின் ஒப்புதல் கடிதம் (11/4/2023)
மூலம் பினாங்கு மாநில அரசாங்க செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டது என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“சமூக தாக்க மேலாண்மை திட்டம் (SIMP) மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை பெருந்திட்டம் (PEOM) ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் உட்பட 71 நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மேலும், இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் ப.இராமசாமி; மாநில அரசு செயலாளர், டத்தோ முகமட் சாயுத்தி பாக்கார்; உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜாய்ரில் கீர் ஜொஹாரி; பினாங்கு உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சென்.பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி (PIC), டத்தோஸ்ரீ பாரிசான் டாருஸ் மற்றும் SRS கூட்டமைப்பு சென் பெர்ஹாட் நிறுவனத்தின் துணை திட்ட இயக்குநர் அஸ்மி முகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

EIA இன் ஒப்புதலுக்குப் பிறகு தற்போது மாநில அரசு, இத்திட்டம் செயல்படுத்தும் கூட்டாளர் (PDP) மூலம் பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்திற்கான (EMP) ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, என முதல்வர் விளக்கமளித்தார்.

“சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தில் (EMP) நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கும்
செயல்முறை விவரங்களும் கொண்டுள்ளது.

“இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் EMP அனுமதி கிடைத்த பின்னரே கடல் விரிவாக்கத் திட்டப் பணிகள் தொடங்கப்படும்.

கடல் விரிவாக்கப் பணிகள் ‘தீவு ஏ’ உடன் தொடங்கும், அதன் 2,300 ஏக்கர் நிலப்பரப்பில் 700 ஏக்கரில் ‘Green Tech Park’ (GTP) உருவாக்கப்படும்,” என்று நிலம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

சுற்றுச்சூழல் துறை(DOE),
பினாங்கு தெற்குத் தீவுகள் (PSI) மீட்புத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உள்ளூர் மீனவர்கள் மற்றும் பினாங்கின் பொருளாதாரத்தை இயக்குவதில் சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும், என அறியப்படுகிறது.

மாநில அரசு பினாங்கு2030 இலக்கு அடிப்படையில் ச் மாநிலத்தின் வளர்ச்சியை தற்போதைய பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப வடிவமைப்பதில் எப்போதும் விழிப்புடன் செயல்படுவதாக கொன் இயோவ் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்பான நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதில் நீண்டகால பிரதான திட்டங்களும் அடங்கும் என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவாக எதிர்கால கடல் மட்ட உயர்வைக் கருத்தில் கொண்டு PSI மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.

“மேலும், பருவநிலை மாற்றம் ஏற்படுவதை அரசாங்க மட்டத்திலும் பிற தொழில்துறை அமைப்புகளும் ஒப்புக்கொள்கின்றன என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசாங்கம், UN-Habitat (ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்ற திட்டம்) மற்றும் Think City உடன் ஒருங்கிணைந்து இயற்கை பருவநிலை தழுவல் திட்டத்தை செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது.