கடந்த பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22-ஆம் திகதியில் பினாங்கு மாநிலத்தில் சீனப்புத்தாண்டு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது . இந்த 2015-ஆம் ஆண்டு சீனர்களுக்கு “ஆடு” ஆண்டு என அழைக்கப்படுகிறது.. சீனப் புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தலைவர்கள் அவர் தம் தொகுதிகளில் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினர் .பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில் திறந்த இல்ல உபசரிப்பு பினாங்கு அனைத்துலக விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது . முதல்வரின் திறந்த இல்ல உபசரிப்பில் மூவின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாநில ஆளுநர் துன் டத்தோஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாஸ் இணையர்கள் உட்பட முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
சீனப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில பண்பாட்டு குழுவினர் மலாய், சீன, இந்திய நடனங்களை வழங்கி வருகையாளர்களை மகிழ்வித்தனர். மேலும், சாகச விளையாட்டு, மாய கண்காட்டு வித்தை மற்றும் கலைநிகழ்ச்சி விருந்தினர்கள் மட்டுமின்றி பொது மக்களையும் வெகுவாக கவர்ந்தது . மாநில முதல்வர் பிரமுகர்கள், விருந்தினர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆரஞ்சு பழம் வழங்கி வரவேற்றார் .
பினாங்கு மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் அவர் தம் தொகுதிகளிலும் திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாடப்பட்டது . புக்கிட் குளுகோர் நாடாளுமன்றம் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற சார்பில் கடந்த 28/2/2015-ஆம் நாள் டெசா பெர்மாத்தா கூடைப்பந்து தளத்தில் திறந்த இல்ல உபசரிப்பு இனிதே நடைபெற்றது. வருகைப்புரிந்த பொது மக்களுக்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்ப்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் இருவரும் தமது பொற்கரத்தால் பொது மக்களுக்கு உணவு பரிமாறினார்.
மேலும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் சார்பில் தாமான் பாகான் கூடைப்பந்து அரங்கில் திறந்த இல்ல உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது. இந்த உபசரிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மார்ச் மாதம் 1-ஆம் திகதி தொடங்கி பெட்ரோல் , டீசல் விலை ரிம0.25 சென் உயர்வடைவதைச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர். அதேவேளையில் மாநில மக்கள் கூட்டணி அரசு ஒவ்வொரு ஆண்டும் தங்கத் திட்டத்தின் மூலம் பினாங்கு வாழ் மக்களுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);