பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் மீதான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் பங்காற்ற சிறப்பு செயற்குழு நியமிக்க எண்ணம் கொண்டு மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
தமிழ்ப்பள்ளிகளுக்கு இச்சேவையை இன்னும் செம்மைப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு ஐவர் கொண்ட புதிய செயலவை குழுவை நியமித்துள்ளது. இந்த சிறப்பு செயலவை குழுவின் தலைவராக டத்தோ கே.அன்பழகன், கடந்த ஆண்டுகளை போன்றே இம்முறையும் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தமிழ்ப்பள்ளிகளை தமது தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக வழி நடத்துவதில் வெற்றிகண்டிருக்கும் டத்தோ அன்பழகனுக்குப் பக்கபலமாக டத்தோ எஸ்.ராஜா, திரு.சத்தீஸ் முனியாண்டி,திரு அணில் அரசு, பாத்திமா ஹசான் ஆகிய நால்வர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த ஐவர் கொண்ட குழு 28 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் சிறப்பான சேவைகளை வழங்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார் பேராசிரியர் அவர்கள்.