பினாங்கு மாநிலம் கெடாவிற்கு நிவாரணம் வழங்க அவசியமில்லை- ஜாசானி

கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களைச் சார்ந்த 3.8 மில்லியன் மக்களுக்குப் பொதுமான நீர் வளங்கள் வழங்கும் கெடா மாநிலத்திற்கு மத்திய அரசாங்கம் நிவாரணம் கொடுக்க முன் வர வேண்டும் எனக் கூறினார் பினாங்கு நீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி பொறியியளாலர் டத்தோ ஜாசானி மைடின்சா.

1கெடா அரசாங்கம் மத்திய அரசிடம் நிவாரணம் கோறுவதற்கு முன் உலு மூடா நீர்ப்பிடிப்பு மையத்தை ஆவணப்படுத்த வேண்டும் எனக் கூறி தனது முழு ஆதரவு கெடா மாநிலத்திற்கு வழங்குவதாகத் தெரிவித்தார்.
கெடா மந்திரி பெசார் அமாட் பாஷா பினாங்கு மாநிலம் கெடாவிலிருந்து மூல நீரை இலவசமாகப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பினாங்கு மாநில அரசுக்கு இலவசமாக நீரை பெறுவதற்கு உரிமை உண்டு என நீர் வாரிய ஆண்டு பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ஜாசானி.
பினாங்கு அரசு கெடா மாநிலத்திற்கு நிதி வழங்காததற்கு 8 காரணங்களைப் பட்டியலிட்டார்.
1)மூடா ஆறு கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தைப் பிரிக்கும் எல்லையே தவிர இரு வெவ்வேறு நாடுகள் அல்ல.
2)1973-ஆம் ஆண்டு இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் பினாங்கு மக்களின் நலனுக்காக “சுங்கை மூடா நதி நீர் திட்டத்தை திறந்து வைத்தார். மாநில அரசு தனது சொந்த செலவில் நீரை பெறுகிறது.
3)1985-ஆம் ஆண்டு கெடா- பினாங்கு எல்லை குறித்த மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பினாங்கு மாநிலம் மூடா ஆற்றிலிருந்து மூல நீர் பெறுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதே தவிர எவ்வித கட்டணமும் விதிக்கவில்லை.
4)மூடா ஆறு இயற்கையான நீர் வளம் கொண்ட நதி.
5)கெடா மாநிலம் மூடா ஆறுக்கு நீர் திறந்து விட ஆணைகள் கட்டியுள்ளன. பெரிஸ் மற்றும் மூடா ஆணைகளிலிருந்து விடப்படும் மூல நீர் முதன்மையாக கெடாவின் 14 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் 6 விவசாயத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்கிறது. எனவே, பினாங்கு மாநிலம் மூடா ஆற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் நீரை மட்டுமே பெறுகின்றது.
6)பினாங்கு மாநிலம் கடந்த 43 ஆண்டுகளாக மூடா ஆற்றிலிருந்து மூல நீரைப் பெறுகின்றது.
7)மூடா ஆறு கெடா மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. மலேசிய அரசியலமைப்பின் சட்டப்படி நீர் விநியோகம், சக்தி, ஆறு அனைத்தும் மத்திய அரசின் கீழ் இடம்பெறுகிறது
8)2011-ஆம் ஆண்டு தேசிய நீர் சேவை மறுசீரமைப்பு குறித்து பினாங்கு மாநிலம் மத்திய அரசாங்கத்திடம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் பினாங்கு மாநிலத்திற்கு மூல நீர் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மேலும், பினாங்கு நீர் அணைகளில் 50% நீர்ப்பிடிப்பு இருப்பதாகவும் மூடா மற்றும் பெரிஸ் அணைகளில் 29% நீர் மட்டுமே இருப்பதாக எடுத்துரைத்தார். எனவே மத்திய அரசாங்கம் தொடர்ந்து மேக விதைப்பு செய்து வடக்கு மாநிலங்களில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.} else {