பினாங்கு வருகை ஆண்டு 2015-யின் கருப்பொருளாக “விழா ஆண்டு” திகழ்கிறது. பிரமாண்டப் பிப்ரவரி கொண்டாட்ட சங்கமத்தோடு பினாங்கு வருகை ஆண்டு 2015 துவக்க விழாக்காண்கிறது. தொடக்கமாக, தென் கிழக்கு ஆசியாவின் உலகின் மிகப் பெரிய குறும்பட விழா வருகின்ற பிப்ரவரி 1-ஆம் திகதி பினாங்கில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கானக் குறும்பட சமர்ப்பணங்களில் சிறந்த படம் அடையாளங்கண்டு, அன்றைய தினத்தில் முதல் நிலை வெற்றியாளருக்கு USD12,000 சன்மானம் அறிவிக்கப்படும்.
பிப்ரவரி மாதம் தொடங்கிய 3வது நாளில் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு உடல் பாகங்கள் மற்றும் முகத்தில் துளையிட்டுக்கொண்டு கனமானக் காவடிகளை ஏந்தி மன உறுதிப்பாட்டுடன் பல கிலோமீட்டர் நடந்து, 500 படிகளைக் கடந்து தண்ணீர்மலை அடிவாரத்தை அடைவர்.
வண்ணமயமான பிப்ரவரி மாதக் கொண்டாட்டத்தில் வருகின்ற 19 & 20-ஆம் திகதி சீனப் புத்தாண்டு முன்னிட்டு ஜோர்ச்டவுன் வீதிகளில் சிங்கம் நடனம் இடம்பெறும். பினாங்கு மாநிலத்திற்கு வருகைப் புரிவது தனித்துவமானது, ஏனெனில் 26-ஆம் திகதி ஜெத்தி குலத்தைச் சார்ந்தவர்கள் பெங்காலான் வெல்ட் பகுதியில் ஹோக்கீன் புத்தாண்டை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அத்தினத்தில் நூற்றுக்கணக்கான விளக்குகளை பாதசாரிகள் ஏந்திக்கொண்டு காதுக்கு இனிமை சேர்க்கும் கலைநிகழ்ச்சியுடன் அத்தெருவில் வண்ணமயமான அணிவகுப்பு இடம்பெறும்.
இரண்டு சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் இடையே பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22 திகதியில் “பினாங்கு காற்றழுத்த பலூன் விழா”
(Penang Hot Air Balloon Fiesta) முதல் முறை பினாங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு வருகையாளருக்கு மகத்துவமான அனுபவத்தை வழங்குவதோடு பினாங்கு வாழ் மக்கள் தங்களின் வாசற்படியில் 15 காற்றழுத்த பலூன்களைக் காணலாம் அல்லது பாடாங் போலோவிற்குச் சென்றும் பார்க்கலாம்.
பினாங்கு வருகை ஆண்டு 2015 என்பதற்குச் சான்றாக “விழாக்கள் முடிவற்றது” மற்றும் பிரமாண்டப் பிப்ரவரிக் கொண்டாட்டம் மறக்கமுடியாத பேரின்பத்தை வழங்கும். விழாக்கள் பற்றிய மேல் விபரங்களுக்கு mypenang.gov.my/vpy அல்லது புகைப்படங்கள் மற்றும் நேரடி அறிக்கைகள் அறிந்து கொள்வதற்கு #mypenangvpy அகப்பக்கத்தை வலம் வரலாம்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);