பிறப்புப் பத்திரம் எடுக்க உதவுமாறு தாய்க்கு கோரிக்கை.

டந்த 2008-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய குடும்பத்தினரிடம் சீன மாது ஒருவர் தனது இரண்டு மாத பெண் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்து அதனை கவனித்துக் கொள்ள வேண்டி அதற்காக மாதந்திர கட்டணமாக ரிம300-ஐ வழங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அம்மாது காணாத வேளையில் சம்மந்தப்பட்ட இரவீந்திரன் அக்குழந்தையைப் பராமரிக்கும் இன்னலுக்குத் தள்ளப்பட்டார் என தமது சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன்.

பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன் மற்றும் இரவீந்திரன்
பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன் மற்றும் இரவீந்திரன்

எட்டு வருடங்களாக தமது சொந்த மகளாக வளர்த்து வந்த அச்சீன குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அச்சிறுமியை தமிழ்ப்பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இரவீந்திரன் ஈடுப்பட்டார். பதிவு இலாகாவிடம் அணுகியபோது அக்குழந்தைக்கு தனது தாயாரால் பிறப்புப் பத்திரம் எடுக்கப்பட்டதை அறிந்ததாகச் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். எனவே, இப்பிறப்புப் பத்திரம் பிரச்சனையைக் களைய சம்மந்தப்பட்ட சீனத் தாயை தேடும் பணியில் இரவீந்திரன் ஈடுப்பட்டுள்ளார். இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் கருணையில் முதலாம் ஆண்டு கல்வியைப் பயின்று இவ்வாண்டு இரண்டாம் ஆண்டு பயில மீண்டும் பிறப்புப் பத்திரம் இல்லாதது தடையாக இருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் மாநில கல்வி இலாகாவிடம் தொடர்பு கொண்டு இச்சிறுமியின் கல்விக்கு தாம் அனுமதி கோரியப்போது ஆறு மத காலத்திற்கு மட்டும் அதாவது எதிர்வரும் ஆகஸ்டு திங்கள் வரையில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சிறுமிக்கான அவளின் பிறப்புப் பத்திரம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், அவளின் தாயார் எங்கிருந்தாலும் நேரில் வந்து உதவுவதே சிறந்த தீர்வாக அமையும் என மேலும் தெளிவுப்படுத்தினார் சட்டமன்ற உறுப்பினர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்து கலாச்சாரக் கூறுகளுடன் அச்சிறுமியை வளர்த்ததால் அவளுக்கு ஐஸ்வரியா மகாலட்சுமி என பிறப்புப் பத்திரம் எடுக்க தாம் எதிர்ப்பார்ப்பு கொண்டுள்ளதையும் இப்பிரச்சனையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட சீன மாது நேரில் வருமாறு கோரிக்கை விடுத்தார் இரவீந்திரன்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);