19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிறை சந்தை பாரம்பரிய கட்டிடமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக்கொண்ட வேளையில் நீதி மன்றம் மற்றும் நகராண்மைக் கழகத்தின் எந்த ஒரு அனுமதியின்றி, இங்குள்ள மேம்பாட்டு நிறுவனம் கடந்த 7/3/2015-ஆம் நாள் , எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், கனரக இயந்திரங்களை கொண்டு உடைத்து தரமட்டமாக்கியதால், பிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிறை சந்தையை உட்படுத்திய கம்போங் மானிஸ் பகுதியில், மேம்பாட்டை கொண்டுவரும் பொருட்டு மேம்பாட்டு நிறுவனமான ஒன்றுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் வேளையில், அரசு அலுவலங்கள் விடுப்பு நாளான சனிக்கிழமையில் மேம்பாடு நிறுவனம், எந்த ஒரு பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்காமல் கட்டங்களை உடைத்து தள்ளியதுடன், தண்ணீர் வாரியத்தின் குழாய்களையும் உடைத்து விட்டதாக கூறினார் பிறை சட்ட மன்ற உறுப்பினரும், மாநில துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி.
தற்போது மக்கள் வியாபாரம் செய்துக்கொண்டிருக்கும் கட்டடங்களை உடைத்தது தவறு என்பதால், உடனடியாக கட்டடத்தை உடைக்கும் வேலையை நிறுத்தி வைக்கும் உத்தரவை, தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க செபராங் பிறை நகராண்மைக் கழக செயலாளர் துவான் ரோசாலி உட்பட, அதிகாரிகள் சம்பவம்
நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, தடை செய்யும் அறிக்கையையும் அக்கட்டடத்தில் ஒட்டினர்.
பிறை கம்போங் மானிஸ் பகுதியில், காலை, மாலை சந்தைகளில் வியாபாரம் செய்து வரும் இந்தியர்கள் உட்பட மூன்று இனத்தையும் சேர்ந்த வியாபரிகளுக்கும், இழப்பிட்டுத் தொகை இன்னும் முழுமையாக கிடைக்காத நிலையிலும், சிலக் கடைகளைத் தவிர்த்து, மிகப்பழமையான கடை வரிசைகள் பினாங்கின் புராதன சின்னத்தின் சேர்க்கப்படும் என்று அண்மையில் தான் அறிவித்திருந்ததை நினைவுக் கூர்ந்த பேராசிரியர் இராமசாமி மேம்பாட்டு நிறுவனம் எதையுமே செவி சாய்க்காமலும், எந்த ஒரு அனுமதி பெறாமலும் உடைத்திருப்பது சட்டத்தை மீறும் செயல் என்று சாடினார். உடைக்கப்பட்ட கடைகளில் இருந்து வியாபாரிகள் தங்களின் உடைமைகளை சோகத்துடனும் கண்ணீர் மல்க அப்புரப்படுத்திக்கொண்டிருந்தனர்..