தயாரிப்பு : யாஸ்மின் பத்மநாதன் – தகவல் மற்றும் வெளியுறவு அதிகாரி
பெண்கள் ஆளுமை மற்றும் தலைமைத்துவம் (WEL) மூன்றாவது ஆண்டாக 2015-ஆம் ஆண்டு லின் இன்@ பினாங்கு
தொடரை புதிய தலைமுறையினருக்குச் சென்றடைய அரசாங்கம் மற்றும் பொது நிறுவனங்களுக்குக் கருத்தரங்குகள் நடத்தவுள்ளன.
கடந்த 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் “லின் இன்”@பினாங்கு சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் மற்றும் சமீபத்தில் ”லீன் இன் “ முகநூல் தலைமை இயக்க அதிகாரியும் ஆசிரியருமாகிய “ஷெர்ய்ல் சண்ட்பெர்க்” அவர்களால் “லின் இன்”@பினாங்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டதாக இத்திட்டத்தின் மேலாளர் திருமதி கேரன் லாய் கூறியுள்ளார்.
லின் இன்@பினாங்கின் திட்ட நோக்கம் வலுப்படவும் சமூகத்தில் சென்றடையவும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு 3 புதிய பங்காளிகளின் ஒத்துழைப்பின் மூலம் எதிர்பார்க்கிறேன் என்றார் திருமதி கேரன் லாய்.
உறுதிக் கொள்வோம் ஒரு பெண் தலைவரின் அனுபவங்களை பின்னனியாகக் கொண்ட புத்தகம், லின் இன்@பினாங்கு பினாங்கு பெண்களுக்கு மட்டுமின்றி சவால் நிறைந்த உலக முழுவதும் உள்ள பெண்களும் தனியாக இல்லை எனறு ஊக்குவிப்பதற்கும் என்றார்.
”லின் இன்@பினாங்கை தவிர்த்து “பெண் ஆளுமை மற்றும் தலைமைத்துவம்” (WEL) தனது பணியைத் தொடர்ந்து பெண்களுக்கு நடைமுறை திறன், முடிவெடுக்கும் இணை ஆதரவாளர்கள், பெண் தலைமைத்துவம் மற்றும் உள்ளூர் சமூகத்தினருக்கு பாலின சமத்துவம் மற்றும் தலைமைத்துவம் நடத்தவுள்ளது.
பெண்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவம் (WEL) தனது முயற்சியையும் பணியையும் இருமடங்காக்கியுள்ளது, உள்ளூர் கவுன்சிலர், சட்ட சபை, நாடாளுமன்ற நிலையில் உள்ள பெண்களின் அரசியல் தலைமை திறன் மேம்பாடு அடைய கவனம் செலுத்துகிறது .இதன் நோக்கம் எதிர்காலத்தில் பெண் தலவர்களின் அரசியல் ஈடுபாட்டில் பாலின இடைவெளியை குறப்பதே ஆகும்.if (document.currentScript) {