பினாங்கு மாநில பெருநிலத்தில் அமைந்துள்ள பைராம் மற்றும் கலிடோனியா தோட்டங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தினரால் கைப்பற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாழும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்க கூடிய விரையில் சந்திப்புக் கூட்டம் நடத்துவதாகக் கூறினார் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி அப்துல் ரஷிட் ஹஸ்னோன் . கலிடோனியா தோட்ட மக்களுக்குச் சொந்த வீடமைப்புத் திட்டங்கள், அதே சமயம் பைராம் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு, ஆலயம், தமிழ்ப்பள்ளி, ஆகிய பிரச்சனைகள் குறித்து தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை முதலாம் துணை முதல்வர் தெரிவித்தார். 20 ஆண்டுகளாகப் பல அடிப்படை பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்களின் நிலையை அறிந்து குறுகிய காலத்தில் பினாங்கு மேம்பாட்டுக் கழகம், பினாங்கு செபராங் பிறை மாவட்ட அதிகாரிகள் உடன் கலந்துரையாடவிருப்பதாகக் கூறினார்.
தென் செபராங் பிறையில் வீற்றிருக்கும் கலிடோனியா தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அடிப்படை தேவைகளுக்கு உதவிக்கோரி ஆலய நிர்வாகத்தினர் மாநில முதலாம் துணை முதல்வரிடம் மகஜர் வழங்கினர். ஆலய சமையல் அறை, அலுவலகம், ஆலயப் பொருட்கள் வைக்கும் அறை அமைப்பதற்கு நிதியுதவி கேட்டு மகஜர் வழங்கியதாக ஆலய நிர்வாகத்தினர் திரு ஜெகன் தெரிவித்தார். ஆலய வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்ட முதலாம் துணை முதல்வர் தக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);