உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு இவையனைத்தையும் உள்ளடக்கிய பொங்கல் விழா இப்போது மலேசியர்களின் விருப்பதிற்குரிய திருவிழாவாக அனைத்து நிலையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளை முன்னிட்டு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு தனசேகரன் அவர்கள் இந்திய மக்களுக்குப் பொங்கல் பரிசுக்கூடை வழங்கினார். அவரின் சட்டமன்ற தொகுதியில் இடம்பெறும் கம்போங் பெர்லிஸ், உஜொங் பத்து, தாமான் மேவா, பாகான் சேனா, லோரோங் கூபுர், கம்போங் வீரம்மா மற்றும் பல வீடமைப்புப் பகுதியில் இந்தப் பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன.
இந்தியர்கள் இந்தப் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு பொங்கலுக்குத் தேவையான அரிசி, நெய், முந்திரி & திராட்சைப்பழம் மற்றும் பால் உள்ளடக்கியப் பரிசுக்கூடை வழங்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் அவர்கள் நேரடியாகச் சென்று இந்திய குடுப்பத்தினருக்குப் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டு தனது பரிசிக்கூடையும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்தப் பொங்கல் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்விற்குத் தனது நிதியிலிருந்து ரிம10,000 செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டார். அனைத்து இந்திய மக்களுக்கும் தனது இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் சட்டமன்ற உறுப்பினர்.}