பினாங்கு மாநில பொதுப்பணி ஊழியர்கள் மாநில அரசின் கொள்கையைப் பின்பற்றி செவ்வென கடமையாற்ற வேண்டும் என தி டோப் அரங்கத்தில் நடைபெற்ற பொதுப்பணி ஊழியர்களுடனான சந்திப்புக்கூட்டத்தில் மாநில முதல்வர் குறிப்பிட்டார்.
சுமார் 4,718 பொதுப்பணி ஊழியர்கள் பினாங்கு மாநிலத்தில் பணிப்புரிகின்றனர். மாநில அரசுடன் பொதுப்பணி ஊழியர்கள் தொடர்ந்து ஒத்துழைத்து கடமையாற்ற வேண்டும் என தமதுரையில் கூறினார். பொதுப்பணி துறையின் தரத்தையும் சேவையும் அதிகரிக்க மாநில அரசு தொடர்ந்து பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடமையை முறையாக செயலாற்றுதல், தாமதமாக வேலைக்கு வருதல், சட்டவிரோத செயல்களில் ஈடுப்படுதல் மற்றும் இலஞ்ச ஊழலில் ஈடுப்படும் பொதுப்பணி ஊழியர்கள் இடையே மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்காது என அக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ பரிசான் பின் டாரூஸ் குறிப்பிட்டார். எனவே, ஒவ்வொரு பொதுப்பணி ஊழியர்களுக்கும் மாநில அரசின் திறமை, பொறுப்பு மற்றும் வெளிப்படை கோட்பாட்டின் கீழ் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், மலேசியாவில் பினாங்கு மாநில அரசு தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கு கணக்கறிக்கையை சமர்ப்பிக்கும் முதல் மாநிலம் என பெருமிதமாகக் குறிப்பிட்டார்.