‘மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு’  தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு வித்திடும் .

ஜோர்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக நடத்தப்படும் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு” மூலம் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சவால்கள் கண்டறிப்படும் என  இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி செய்தியாளர் சந்திப்பு க் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

புதிய மலேசியாவில்  தமிழ்க்கல்வியை மேம்படுத்தும் வகையில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அலுவலகமும் பினாங்கு தமிழர் முன்னேற்றச் சங்கமும் இணைந்து ‘மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு’ நடத்தவிருக்கிறது.

இந்த மாநாட்டின் விவரம் பின்வருமாறு :-

தேதி    : 26 & 27  நவம்பர் 2018
இடம்     : ‘தி லைட்’ தங்கும் விடுதி, பினாங்கு

நேரம்.   :காலை மணி 9.00 – மாலை மணி5.00
நுழைவு : இலவசம்

 

இந்த மாநாடு பொதுவான மாநாடாக அமையாமல்  தமிழ்க்கல்வியின் முன்னேற்றம் குறித்து பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எந சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் வாயிலாக தாய்மொழிப் பயன்பாடு வலியுறுத்தப்படும்.ஏனெனில், அனைத்து மலேசியர்களுக்கும் தாய்மொழி பயன்பாடு முக்கிய கூறாக அமைகிறது என்றால் மிகையாகாது.

இதுவரை இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 200 பங்கேற்பாளர்கள் பதிவுச் செய்துள்ளனர்.

இந்த மாநாட்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி, தேசிய பள்ளிகளில் தமிழ்க்கல்வி கற்றல் & கற்பித்தல் மற்றும் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கும் திட்டம் பற்றியும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப் போவதாக பேராசிரியர் கூறினார்.

இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைப்பதற்கு கல்வி அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் . இந்த மாநாட்டில் தமிழ்க்கல்வியின் கொள்கைகள் குறித்தும்  ஆய்வு மேற்கொள்ளப்படும்,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர்க்கல்வி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
மேல் விபரங்களுக்கு 04-6505134 அல்லது 016-4474738 (பன்னீர்செல்வம்) அல்லது010-563 2279 (ஜெகதீசன்) தொலைபேசி எண்களில் அல்லது புலனம் வாயிலாக தொடர்கொள்ளலாம் .