பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி அரசு கைப்பற்றியப் பிறகு மக்களின் நலனுக்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது இன்றியமையாததாகும். நெகிழிப் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க அனைத்து கடைகளிலும் பேரங்காடிகளிலும் அதன் விற்பனைத் தடைச் செய்யப்பட்டது. இத்தடை 1.7.2009-யில் அமலுக்கு வந்தது அனைவரும் அறிந்ததே.
2009-ஆம் ஆண்டில் ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் நெகிழிப் பைகளின் விற்பனைத் தடைச்செய்தனர். அதோடு, 2010-ஆம் ஆண்டில் இந்நிலைமை மூன்று நாட்களாகவும், 2011யிலிருந்து 7 நாட்களாக அதிகாரப்பூர்வமாக நெகிழிப் பைகளின் இலவச பயன்பாடு தடைச்செய்யப்பட்டன. நெகிழிப் பைகளின் விற்பனையிலிருந்து கிடைக்கப்பெற்ற வருமானங்கள் கீழ் வருமாறு:
ஆண்டு |
கிடைக்கப்பெற்ற தொகை |
2009 |
182,980.21 |
2010 |
298055.97 |
2011 |
894,716.61 |
2012 |
1 230,493.25 |
2013 ஜுன் வரை |
447,756.44 |
நெகிழிப்பைகள் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை மூத்த குடிமக்கள், தனித்து வாழும் தாய்மார்கள், தங்க மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படுகின்றன. ஆட்சிக்குழு உறுப்பினரான பீ புன் போ நெகிழிப் பைகளை ரிம 0.20-க்கு விற்பதன் மூலம் சேகரிக்கப்பட்டப் பணம் மற்றும் செலவினங்கள் பற்றிய விபரங்களை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் . வசூலிக்கப்பட்டப் பணம்பொருளாதார திட்டமிடல் பிரிவின் (UPEN) கீழ் இயங்கும் பினாங்கு மாநில கணக்கில் வரவில் சேர்க்கப்படும் என்றார். மேலும் இந்த வருமானத்தைப் பயன்படுத்தி AES எனப்படும் சமத்துவப் பொருளாதாரத் திட்டம் வரையறுக்கப்படுகிறது. 2013-ஆம் ஆண்டு பினாங்கு மாநில அரசு மாநிலத்தில் வறுமை ஒழிக்க AES தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தின் வழி மாநில அரசு ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு ரி.ம770-யை வருமானமாகப் பெறுவதை உறுதிச் செய்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு விலைச்சீட்டு போடப்படுவதன் மூலம் நெகிழிப் பை விற்படுவது அறியப்படுகிறது. இதற்காக, தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு பேரங்காடிகளிலும் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறினார். நெகிழிப் பைகளை அதிகமாகச் சுற்றுலா பயணிகளும் வெளிநாட்டு தொழிலாளர்களும் 0.20 சென் கொடுத்து வாங்குகின்றனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் அறியப்படுகிறது என்றார்