மீண்டும் தங்கத்திட்டம் மலந்தது.

பிறை தொகுதியில் மூத்தகுடிமக்களுடன் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி.
பிறை தொகுதியில் மூத்தகுடிமக்களுடன் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி.

மூத்தக் குடிமக்களைப் போற்றும் தங்கத் திட்டத்தின் வழி பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கொடுத்த உறுதிமொழியினை 2016-ஆம் ஆண்டும் மீண்டும் காப்பாற்றியுள்ளது. அதன்படி 1 ஜனவரி 1953 –ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த, 60 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காக இத்தனைக் காலமாக உழைத்த மூத்தக் குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது. இதனிடையே, தனித்து வாழும் தாய்மார்களுக்காக தங்கத் தாய்மார் திட்டமும் அறிமுகப்படுத்தியது என்றால் மிகையாகாது. மூத்தக்குடி மக்களுக்கென முதலாம் நிலைக்கான கட்டணம் வழங்கும் திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கியது.

ஆயர் ஈத்தாம் தொகுதியில் தங்கத்திட்டப் பணத்தை பெற்றுக்கொள்ள அலையென திரண்ட முதியவர்கள்.
ஆயர் ஈத்தாம் தொகுதியில் தங்கத்திட்டப் பணத்தை பெற்றுக்கொள்ள அலையென திரண்ட முதியவர்கள்.
ரிம-100 பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் முதியவர்
ரிம-100 பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் முதியவர்

இதுவரை பினாங்கு மாநிலத்தில் 160,989 மூத்தக் குடிமக்கள் தங்க முதியவர் திட்டத்தின் கீழ் பதிவுப்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 மலயன் வங்கிகளில் கடந்த 5 – 6 மார்ச் தினத்தில் ரிம100-ஐ ரொக்கப்பணமாக பெற்றுக்கொண்டனர். பிறை தொகுதியில் மட்டும் 3,040 மூத்தக் குடிமக்கள் இத்தங்க திட்டத்தில் ரொக்கப்பணம் பெற்றுக் கொண்டனர். இதனிடையே, உடல்பேறு குறைந்த வயோதிகள் மதியம் 1 மணிக்கு மேல் பிரதிநிதிகள் அவர்களின் சார்பாக ஊக்கத்தொகையைப் பொறுப்பாளர் கடிதத்தின் துணையுடன் (Surat Pelepasan Tanggungjawab) பெற்றுக்கொண்டனர்.