சுங்கை ஆரா – சிறிய எண்ணிக்கையில் இருந்தும் பெரிய கனவுகள், மன உறுதி, முற்போக்கு சிந்தனை ஆகியவற்றைக் கொண்ட பள்ளியாக இருப்பதால், சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி, ஒரு சாதாரண பள்ளிகள் கூட பெரிய விஷயங்களைச் சாதிக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பினாங்கில் உள்ள சுமார் 129 பள்ளிகள் மேக்கர் லேப் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும்.
பள்ளி தலைவர் வினோத் துலுக்கண்ணம், விவேகத்துடனும் ஆக்கப்பூர்வ சிந்தனையுடனும், அர்ப்பணிப்பு மற்றும் திறமையான ஆசிரியர்களுடன் இப்பள்ளியை வழிநடத்துகிறார்.
வினோத் கூறுகையில், பள்ளியில் மேக்கர் லேப் அமைத்தவுடன் மாணவர்களிடையே வருகையை மேம்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் ஸ்தெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பாடங்களில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியில் மேக்கர் லேப் கடந்த ஆண்டு அக்டோபரில் பினாங்கு அறிவியல் கிளாஸ்தர் (PSC) உபகரணங்களை வழங்கி பள்ளியின் தலைமையாசிரியர் முயற்சியில் அமைக்கப்பட்டது.
“இதைத் தொடர்ந்து, PSC ரோபோட்டிக்ஸ், ட்ரோன் பயன்பாடு மற்றும் ‘ஸ்கிராட்ச் கோடிங்’ குறித்த வகுப்புகளை நடத்தத் தொடங்கியது. அவை பள்ளியில் பள்ளி நேரத்திற்குப் பிறகு நடைபெறும்.
“அதிலிருந்து, மாணவர் வருகையில் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்தோம், மேலும் அவர்கள் ஸ்தெம் கற்றலில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்” என்று வினோத் சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது முத்து செய்ய்திகளிடம் கூறினார்.
ஸ்தெம் அடிப்படையிலான செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்க மாணவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தவும் இப்பள்ளி வாய்ப்பளிக்கிறது.
“வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் பாடத்தைச் சேர்ந்த இப்பள்ளி ஆசிரியர்கள் சமீபத்தில் ‘PesInPro 2.0 – Inovasi STEM Agro’ போட்டியில் பங்கேற்றனர்.
“அவர்கள் ‘Aquaphonic with Microcontroller System’ அமைப்பினை கண்டுபிடித்து 4-வது இடத்தை வென்றனர்.
“மாணவர்கள் மட்டுமல்ல, நாங்கள் எங்கள் அசிரியர்களின் திறன்களை வெளிக்கொணர விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆசிரியைகளில் ஒருவரான மஞ்சுளா கூறுகையில், இந்த திட்டத்தை முடிக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது என்றார்.
மாணவர்களின் போட்டிகளில் பங்கேற்பது பற்றிப் பேசிய வினோத், முந்தைய பினாங்கு அறிவியல் கண்காட்சியில் சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியில் இருந்து மொத்தம் 40 மாணவர்கள் ‘Basic AC to DC Converter’ ‘ திட்டத்தில் பங்கேற்றதாக பகிர்ந்து கொண்டார்.
“மாணவர்கள்வ் பெற்றோர்கள் மற்றும் ஓய்வுபெற்ற விரிவுரையாளர்களால் நடத்தப்பட்ட இரண்டு மாத பயிற்சிப் பட்டறைகளை பினாங்கு அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் தயார்படுத்தி கொள்ள வழிவகுத்தன.
“இது அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் அவர்கள் பார்வையாளர்களுக்கு ஆங்கிலத்தில் நம்பிக்கையுடன் தங்களின் படைப்புகளைப் பற்றி விவரிக்க முடிந்தது,” என்று வினோத் கூறினார்.
இனாரி அமெர்டன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கண்காட்சியில் பயிலரங்கம் மற்றும் பள்ளிப் பட்டறைகள் நடைபெற்றதாக வினோத் மேலும் கூறினார்.
வினோத்தின் கூற்றுப்படி, மாணவர்கள் அண்மையில் மலேசிய பினாங்கு அறிவியல் பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்தெம் கார்னிவலில் பங்கேற்றனர். அங்கு அவர்கள் ரோபோ போட்டியில் அரையிறுதிக்கும், திறமை வெளிபாடு போட்டியில் இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றனர்.
“கார்னிவலில் ‘வாட்டர் ராக்கெட்’, பாலம் கட்டுதல் மற்றும் நாளைய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்றனர்.
“கடந்த ஆண்டு, எங்கள் மாணவர்கள் மாநில அளவிலான தமிழ் பள்ளிகளுக்கு இடையேயான நீர் ராக்கெட் போட்டியில் வெற்றியாளர்களாக வாகை சூடினர்,” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் கோபிநாதன் மற்றும் இப்பள்ளியின் வாரிய மேலாளர் இலியாஸ் எலேக்சென்டர் சிறந்த சேவையையும் உறுதுணையாகவும் பணியாற்றி வருவது பாராட்டக்குரியதாகும்.