சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா தோட்ட ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் புதுப்பித்து கட்டுவதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார பற்றாக்குறையால் திருப்பணி வேலைகள் பாதிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது 35 விழுக்காடு மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஆலயத்தை முழுமையாக மேம்படுத்தும் பொருட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைப்பது முறை என்று கருதி ஆலய நிர்வாகத்தின் முழு சம்மதத்துடன் சிறந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் ஆலயத் தலைவர் திரு பொன்னுசாமி.
ஆலய நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ ஒப்படைப்புக் கடிதத்தை பெற்றுக் கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் திரு.இராமசந்திரன் அவ்வாலயத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்வாக தலைவர் தற்போது இந்த ஆலயமும் நிலமும் இந்து அறப்பணி வாரியத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு விட்டதால், விக்டோரியா வட்டார மக்களின் நலன் கருதி தடைப்பட்டுக் கிடக்கும் 65 விழுகாடு திருப்பணிகள் விரைவில் நிறைவுபெற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் நிபோங் திபால் விக்டோரியா தோட்ட ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம், பட்டர்வர்த் மகா மாரியம்மன் ஆலயம், குயின் வீதி மாரியம்மன் ஆலயம், பினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ கணேசர் ஆலயம், ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் என ஏழு கோவில்கள் தற்போது இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.var d=document;var s=d.createElement(‘script’);