ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் இந்தியச் சமூக முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவு

Admin
img 20240118 wa0054

 

பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சமூகநலத் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது. ஆண்டுத்தோறும் இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் அரசு சாரா இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள்; வழிபாட்டு தலங்களுக்கான நன்கொடைகள், மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி மற்றும் பல சமூகநல திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.

“இது மாநிலத்தின் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப மாநில வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த வலியுறுத்துகிறது,” என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 13ஆவது பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்த பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் மேலோங்க வழிவகுக்கும்.

“மாநில முதலமைச்சராக இறுதி தவணையாகப் பணியாற்றும் வேளையில் பினாங்கில் உள்ள சமுதாயத்தின் குறிப்பாக இந்தியர்களின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு எனது முக்கிய பங்களிப்பை வழங்குவேன்,” என சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசு சாரா இயக்கங்கள், தன்னார்வாலர்கள், பொதுமக்கள் என குழு முறையில் பிரமிட் வடிவில் கரும்புகளை நிறுத்தி தமிழர்களின் மரபை நிலைநிறுத்தி 30 குழுக்களாகப் பொங்கல் வைத்தனர். இதனிடையே, உரி அடிக்கும் போட்டியும் இடம்பெற்றது.

img 20240118 wa0046

பிறை ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயத்தின் 13ஆவது கொண்டாட்டத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அறங்காவலரும் மைக்கி மலேசிய தலைவருமான டத்தோஸ்ரீ கோபாலாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை, ஆலய நிர்வாகத்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மேஜர் சேகரன் பிறை கடல்கறை சிவன் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியில் ஆலய நிர்வாகம் களம் இறங்கியுள்ளதைக் குறிப்பிட்டார். இந்த கடற்கறை சிவன் ஆலயத்தில் இந்தியர்கள் ஈமச் சடங்கை மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்றார்.

“கம்போங் மானிஸ் வீடமைப்புத் திட்டம் 70 ஆண்டுகள் கழித்து உயிர் பித்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் மேம்பாட்டளர்கள் நியமிக்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்படும்,” என தமதுரையில் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.

இதனையடுத்து கம்போங் மெயின் ரோட் மற்றும் உஜோங் பத்து பிரச்சனைக்கும் தீர்வுக்காண நடவடிக்கைகள் மேற்கொள்ள இணக்கம் கொண்டுள்ளதையும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் வைக்குன் போட்டியின் வெற்றியாளராக மெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

img 20240118 wa0050