அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் திட்டத்தில் 390,000 (கி.கி) மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு – ஜெக்டிப்.

 

தொடர்ந்து, இதுவரை அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்து திட்டத்தை அமல்படுத்தாத தரப்பினருக்கு பினாங்கு மாநகர் கழகம் 91 அபராதங்களும் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் 644 அபராதங்களும்   விதித்ததாக  டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ குறிப்பிட்டார். இவ்விரண்டு ஊராட்சி மன்றங்களும் நில குடியிருப்பு, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றை சோதனையிட்ட பின்னர் இந்த 735 அபராதங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

பினாங்கு மாநில அரசும் தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலக்கை அடையவும் அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் திட்டத்தை மெய்ப்பிக்க செய்ய பினாங்கு வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சிக்குழு உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.