இந்நாட்டில் மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் குடியுரிமைக்கும், அடையாள அட்டைக்கும், பிறப்பு ஆவணம் பெறாமல் தவிக்கும் இயலாமையும் கண்டு மனம் வேதனையடைகிறது என்று புக்கிட் மெர்த்தாஜாம், மைடீன் பேராங்காடி வளாகத்தில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான குடியுரிமை திட்டம் எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வேதணையாக கூறினார்.
மேலும், இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு, சமூகநல உதவி, குடிநுழைவுத் துறை தொடர்பான அலுவல்கள், அனைத்து தங்கத் திட்டங்களிலும் பதிவுச் செய்தல், பினாங்கு வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டன. இத்திட்டம் பினாங்கு மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் பேராசிரியர். மூன்றாவது முறையாக குடியுரிமை சிறப்பு குழுவின் முயற்சியில் இந்நிகழ்வு நடைபெறுவதாகப் புகழாரம் சூட்டினார் பேராசிரியர்.
இந்த நாட்டில் பிறந்தவர்கள் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இன்னும் குடியுரிமைக்காக பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று தனது ஆய்வினை வெளியிட்டுள்ளது என்று எடுத்துரைத்த பேராசிரியர் இராமசாமி உண்மையிலேயே இது ஒரு அதிர்ச்சித்தரும் செய்தி என்பதை குறிப்பிட்டார். சீன, இந்தியர் இனத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பலருக்கு சரியாக மலாய் மொழி பேசத்தெரியாததால், அரசாங்க பதிவிலாகாவிற்கு சென்று குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், மலாய் பேசுவதில் ஏற்படும் சிக்கலால் இவர்களின் விண்ணப்பம் அப்படியே நிகாரிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது என்று கூறிய பேராசிரியர் டாக்டர் இராமசாமி, இது போன்ற பிரச்சனைகளை களைய அரசாங்கம் சரியா சிந்தித்து செயல் பட்டால், ஏழை இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைகள் உட்பட மற்ற இனத்தவரின் பிரச்சனைகளும் முறையாக தீர்வதற்கான வாய்ப்பு இருப்பதை பேராசிரியர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில அரசாங்க ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக நடக்கும் குடியுரிமை திட்ட விண்ணப்பம் நிகழ்ச்சிக்கு 150 இருந்து 200 பேர்கள் குடியுரிமை தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளுக்காக வருகிறார்கள், அவர்களிடம் நாம் விசாரிக்கும் பட்சத்தில், மலாய் மொழி பிரச்சனை காரணமாக அவர்களின் முறையீடு சரியாக கவனிக்கப்படுவிதில்லை என்று கூறுகின்றார்கள் என்று இராமசாமி விவரித்தார். பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பாக நாங்கள் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவது என்பது ஒவ்வொரு பதிவிலாகா அலுவலகங்களிலும் தமிழ், சீனம் தெரிந்த பணியாளர்களை வேலைக்கு நியமித்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என்பதுதான் என்று மைடீன் பேராங்காடியில் நடந்த குடியுரிமை திட்ட நிகழ்சியை அதிகாரவப்பூர்வமாக தொடக்கி வைத்த பேராசிரியர் இராமசாமி வேண்டுகோல் விடுத்தார்.
புக்கிட் மெர்த்தாஜாம் மைடீன் பேராங்காடியின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஹஜி சாடுரூட்டின் குலாம், நிர்வாகி அமீன் சாடுரூட்டின் இருவரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற குடியுரிமை திட்ட நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் மு.இராமசந்திரன், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் சத்தீஸ் முனியாண்டி, டேவிட் மார்ஷ்ல், மேலும் பல பிரமுகர்கள் ஒத்துழைப்பு வழங்கியதுடன் சிறப்பாக கலந்துக்கொண்டனர்