புக்கிட் தம்புன் – தாமான் இடாமாண் இண்டா அடுக்குமாடி குடியிருப்பின் நிரந்தர உரிமையாளர்கள் அனைவரும் நிர்வாக வாரியத்தை (MC) மீண்டும் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதியில் அத்தியாவசியப் பழுதுபார்க்கும் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, குடிமக்கள் கட்டாயம் பராமரிப்புச் சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இங்குள்ள தாமான் இடாமான் அடுக்குமாடிக் குடிமக்களுடனான கலந்துரையாடல் அமர்வின் போது பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கோன் இயோவ் இதனைத் தெரிவித்தார்.
“இக்குடியிருப்பின் நிர்வாக வாரியம் மீண்டும் செயல்பாடுக் காண வேண்டும். இதன் மூலம், சேவைப் பராமரிப்புக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்குக் குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட முகவர்கள் (பராமரிப்பு மேலாண்மை) கடினமாக உழைக்க வேண்டும். இதனால் சேகரிக்கப்பட்ட நிதியின் வாயிலாக சாலை மற்றும் வாகன நிறுத்துமிடத்தை போன்ற மறுகட்டமைக்கும் மற்றும் அதே சமயம் கூரையை மாற்றுவது போன்ற அவசர வேலைகளுக்கும் இந்நிதியைப் பயன்படுத்தலாம்.
“பராமரிப்புக்கானக் கட்டணம் போதுமானதாக இல்லாத வரை, அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்வாகத்தின் (பராமரிப்பு) தரம் பாதிக்கப்படும்.
“எனவே, மாநில அரசு குடியிருப்பாளர்கள் அவர் தம் பொறுப்புகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்,” என்று நில மேம்பாடு மற்றும் பொருளாதாரம் மற்றும் தொலைதொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் இவ்வாறு வலியுறுத்தினார்.
கூடுதலாக, பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான அவர், இக்குடியிருப்பின் நிர்வாக வாரியம் மீண்டும் செயல்படுத்துவதன் மூலம், மாநில அரசு மட்டத்திலோ அல்லது ஊராட்சி மேம்பாட்டு அமைச்சு மூலம் வழங்கப்படும் தொடர்புடைய வீட்டுப் பராமரிப்பு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறினார்.
அதன்பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், கொன் இயோவ் இங்குள்ள தாமான் இடாமானுக்கு அருகிலுள்ள திடல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவை மேம்படுத்துவதற்கு செபராங் பிறை மாநகர் கழகத்தின் (எம்.பி.எஸ்.பி) முன்மொழியப்பட்ட திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
“இந்த பொழுதுபோக்கு பூங்கா, பல்வேறு வசதிகளுடன் கூடிய சமூக செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொது இடமாக மாற்ற முடியும் என்று மாநில அரசு நம்புகிறோம்.
“இங்குள்ள திடல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவை மேம்படுத்தும் பணி செயல்படுத்தப்பட்டாலும், அது எம்.பி.எஸ்.பி திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படாமல், கட்டம் கட்டங்களாக செயல்படுத்தப்படலாம்,” என்று அவர் விளக்கினார்.
மேலும், ஊராட்சி மன்றத்தால் (PBT) முன்மொழியப்பட்ட பொதுத் திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முன்வந்த குடிமக்களுக்குத் தனது பாராட்டுகளை சாவ் தெரிவித்தார்.
புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக், எம்.பி.எஸ்.பி பிரதிநிதி, செபராங் பிறை தெற்கு மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் (PDTSPS) பிரதிநிதி மற்றும் தாமான் இடாமான் அலுவலகத்தின் பிரதிநிதி ரம்லான் ரஸ்தியும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றனர்.