அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தேசிய மீட்புத் திட்டத்தை நோக்கி செயல்பட வேண்டும்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு  மாநிலம் வருகின்ற அக்டோபர் மாதம் இறுதிக்குள் சமூக நோய் எதிர்ப்பு சக்தி  இலக்கை அடைய போதுமான தடுப்பூசி மையம் (பி.பி.வி) செயல்பாடு கொண்டு இயங்குகிறது.

எனினும், தடுப்பூசிகளின் ‘பயன்பாடு’ குறித்து மாநில அரசு கவனமாக திட்டமிட வேண்டும் என முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.
 

“மாநில அரசு பல்வேறு இலக்கு குழுவினருக்கும் தடுப்பூசி சரியான முறையில் வழங்கப்படுவதை  திட்டமிட வேண்டும்.

“எனவே, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பினாங்கு மாநிலத்தை விரைவில் அடுத்த கட்ட மீட்புத் திட்டத்தை நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளை செயல்படுத்த துணைபுரிவது அவசியம்,” என்று நில மேம்பாடு, பொருளாதாரம், மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

முன்னதாக, கொன் யாவ் ஜார்ச்டவுன் தனியார்  மருத்துவமனையில் உள்ள பி.பி.வி மையத்தில்
கோவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை (பிக்) சீராக செயல்படுத்துவதை கண்காணிக்க வருகையளித்தார். 

இந்நிகழ்ச்சியில்  ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின்; கோவிட்-19 நோய்த்தடுப்பு பணிக்குழுவின் தலைவரும் மாநில செயலாளருமான டத்தோ அப்துல் ரசாக் ஜாஃபர்; டத்தோ டாக்டர் லியோங் மெங் லூங் (ஜார்ச்டவுன் தனியார் மருத்துவமனையின் தோற்றுநர் மற்றும் இயக்குநர்) மற்றும் டாக்டர். மேரி ஆன் ஹாரிஸ் (பினாங்கு மருத்துவ சுற்றுலா மையத்தின் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் கலந்து கொண்டனர். 

நேற்று முதல் செயல்படும் இந்த ஜார்ச்டவுன் தனியார் மருத்துமனை பி.பி.வி மையத்தில் தினசரி 50 டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பி.பி.வி மையம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயங்குகிறது.